குழம்பு, காய்கறிகள் என பல ரெசிபிகள் செய்தாலும் குழம்புக்கு ஏற்ற சைடிஷ் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக தான் இருக்கும். இந்த முறை கேரட் மற்றும் பருப்பு சேர்த்து அருமையான உசிலி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் ஒரு கப் கடலைப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி ஒரு மிக்ஸி ஜாரின் பருப்பை சேர்த்துக் கொள்ளலாம்.
இதனுடன் ஒரு காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி சீரகம், இரண்டு பல் வெள்ளை பூண்டு, கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொண்டால் போதுமானது.
இப்பொழுது ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பருப்பை அடை போல வட்டமாக தட்டி தோசை கல்லில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் தாராளமாக முன்னும் பின்னும் நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக மிதமான தீயில் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு கொத்து கருவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
அடுத்து இதில் பொடியாக நறுக்கிய 10 சின்ன வெங்காயம், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து இது வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒன்றரை கப் துருவீர் கேரட் சேர்த்துக் கொள்ளலாம். கேரட் செத்த பிறகு அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
கொளுத்தும் வெயிலுக்கு சும்மா குளுகுளுவென இருக்கும் குல்பி ஐஸ் ரெசிபி!
குறைந்தது இரண்டு நிமிடம் வரை இதமான தீயில் கேரட் வெந்து வரவேண்டும். இந்த நேரத்தில் நாம் தோசை கல்லில் வேகவைத்த கடலைப்பருப்பு உதிர்த்து தூள் தூளாக மாற்றிக் கொள்ளலாம். கேரட் நன்கு வந்ததும் இதை அப்படியே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறிக்கொடுத்து இறக்கினால் கேரட் பருப்பு உசிலி தயார். சூடான காரக்குழம்பு அல்லது தயிர் சாதம் வைத்து சாப்பிடும் பொழுது இந்த பருப்பு உசிலி சுவை அருமையாக இருக்கும்.