கோடை வெயில் காலம் தொடங்க இன்னும் நாட்கள் இருந்தாலும் வெயிலின் தாக்கம் தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது. அதிகம் தண்ணீர் குடிப்பதன் மூலமாக மட்டுமே நம் உடலின் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த மாதிரி சமயங்களில் தண்ணீருக்கு பதிலாக ஐஸ்கிரீம் சாப்பிட பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். இந்த முறை நம் வீட்டிலேயே எளிமையான முறையில் சுவையான ஐஸ்கிரீம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
முதலில் ஒரு சிறிய துண்டு மஞ்சள் பூசணிக்காவை எடுத்து நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நாம் நறுக்கி வைத்திருக்கும் மஞ்சள் பூசணிக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு கடாயில் இரண்டு கப் கெட்டியான பாலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இரண்டு கப் பால் கால் கப் பாலாக கெட்டியாக மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் சிறிய துண்டு பட்டை, நாம் வேக வைத்திருக்கும் மஞ்சள் பூசணிக்காய், கால் தேக்கரண்டி ஜாதிக்காய் தூள் சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
ரோட்டு கடை ஸ்டைல் ஸ்பெஷல் கோபி நூடுல்ஸ்! அசத்தல் ரெசிபி இதோ…
அடுத்து அதனுடன் அரைக்கப் வெள்ளை சர்க்கரை, கால் கப் பிரஷ் கிரீம், இரண்டு தேக்கரண்டி மில்க் மேடு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். மில்க் மேட் இல்லாத பட்சத்தில் சர்க்கரை கூடுதலாக சேர்த்து.
இப்பொழுது நாம் அரைத்த விழுதுகளை சுண்ட காய்ச்சிய பாலுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் வரை கலந்து கொடுத்து அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது இதை ஐஸ் செய்யும் பாத்திரத்தில் மாற்றி ஒரு நாள் முழுக்க பிரிட்ஜில் குளிர வைக்க வேண்டும்.
அடுத்த நாள் நமக்கு பிடித்தமான மற்றும் சுவையான ஐஸ் தயார். வீட்டிலேயே இதுபோன்ற ஐஸ் தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து மகிழலாம்.