வருடத்திற்கு 20 நாள் மட்டுமே கிடைக்கும் ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் சாம்பாரா தோசை!

சில வகையான உணவுகள் அடிக்கடி வீட்டில் செய்தாலும் பிரசித்தி பெற்ற பாரம்பரிய தொட்ட உணவு முறைகள் அந்தந்த கால கட்டங்களில் அந்தந்த இடங்களில் மட்டுமே பிரசித்தி பெற்று கிடைக்கும். அந்த வகையில் இந்த முறை வருடத்திற்கு 20 நாட்கள் மட்டுமே கிடைக்கும் ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் சம்பாரா தோசை நம் வீட்டில் எளிமையான முறையில் செய்து மகிழ்வதற்கான ரெசிபி இதோ…

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைக்க வேண்டும். அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் அரைக்கப் கருப்பு உளுந்தை நன்கு கழுவி சுத்தம் செய்த தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைக்க வேண்டும்.

அரிசி மற்றும் பருப்பு இரண்டையும் குறைந்தது ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஆறு மணி நேரம் கழித்து முதலில் உளுந்த மாவை அரைக்க வேண்டும். மாவு பாதியாக அரைத்தால் போதுமானது. அதன் பிறகு அப்படியே அரிசி சேர்த்து அரைக்க வேண்டும். அரிசி மற்றும் உளுந்து இரண்டும் ஒன்று சேர்ந்து கொரகொரப்பான பதத்தில் அறைந்தால் போதுமானது மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை.

மாவை அப்படியே இன்னொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். இந்த தோசை செய்வதற்கு தேவையான மசாலாவை தற்பொழுது தயார் செய்து கொள்ளலாம்.

ஒரு குட்டி கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய், இரண்டு தேக்கரண்டி மிளகு சேர்த்து நன்கு பொரிந்ததும் ஒன்றை தேக்கரண்டி சீரகம் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். இந்த பொருட்கள் நன்கு சூடு தணிந்தது ஒன்று இரண்டாக நன்கு இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த பொடியை நாம் அரைத்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதனுடன் கூடுதலாக நன்கு வறுத்து பொடி செய்து வைத்திருக்கும் சுக்குப் படி ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம். இப்பொழுது சம்பாரா தோசை செய்வதற்கான மாவு தயாராக உள்ளது. இந்த தோசை செய்வதற்கு பொதுவான தோசை கல்லை பயன்படுத்தாமல் ஆப்ப சட்டியை பயன்படுத்தும் பொழுது முறையான வடிவத்தில் கிடைக்கும்.

கல்யாண வீட்டு ஸ்பெஷல் அரைச்சு விட்ட கல்யாண சாம்பார்! சுவை மாறாத ரெசிபி இதோ…

இப்பொழுது ஆப்ப கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி மாவு சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். அப்படி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால் சுவையான சம்பாரா தோசை தயார். இந்த தோசையில் மிளகு காரம் தேவையான அளவு கலந்திருப்பதால் தோசைக்கு சைடிஷ் ஆக சட்னி சாம்பார் என எதுவும் அவசியம் இருக்காது அப்படியே சாப்பிட்டுவிடலாம்.

நெய் மணக்கும் பாசத்தில் சுக்கு மிளகு சீரகம் என மருந்து பொருட்கள் கலந்த இந்த சிறப்பு வாய்ந்த சம்பாரா தோசையை நம் வீட்டு குழந்தைகளுக்கு செய்து கொடுத்து மகிழலாம்.