தேங்காய் மசாலா சேர்த்து குழம்பிற்கு பதிலாக அருமையான தக்காளி சாத ரெசிபி!

லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளின் எளிமையானதாகவும் சுவை மிகுந்ததாகவும் இருப்பது தக்காளி சாதம். பிரியாணியின் அதே வாசத்தில் சுலபமான முறையில் வீட்டில் இந்த தக்காளி சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளில் ஒன்று. வாங்க இந்த தக்காளி சாதத்தை எப்போதும் போல ஒரே மாதிரியாக செய்யாமல் சற்று வித்தியாசமாக தேங்காய் சேர்த்து செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

இந்த தக்காளி சாதம் செய்வதற்கு முதலில் சாதத்தை தனியாக வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி கூடுதலாக இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கிளறி நன்கு ஆரம்பித்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சாதம் நன்கு உதிரி உதிரியாக பூ போல இருக்கும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடு படுத்திக் கொள்ளலாம். இதில் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நான்கு பழுத்த தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

மசாலா பொருட்கள் சேர்த்த பிறகு தக்காளியோடு மசாலா இணைந்து மசிந்து வரும் வரை நன்கு வதக்கி கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல், இரண்டு பச்சை மிளகாய், 5 சின்ன வெங்காயம், ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது மசாலா வாசம் சென்றதும் நாம் அரைத்து வைத்திருக்கும் பொழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் இடித்த இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இஞ்சி பூண்டு விழுதுனில் பச்சை வாசனை சென்று கடாயில் ஒட்டாமல் தொக்கு தயாராகும் வரை மிதமான தீயில் வதக்கிக் கொள்ள வேண்டும்.

நான்கு வீட்டிற்கு சேர்த்து மணக்கும் ஆந்திரா ஸ்டைல் வெஜ் புலாவ் ரெசிபி!

இந்த நேரத்தில் தேவைப்பட்டால் கூடுதலாக தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளலாம். இப்பொழுது அடுப்பை அணைத்து விடவேண்டும். அதன் பிறகு நாம் வேகவைத்து ஆற வைத்திருக்கும் சாதத்தை தொப்புடன் சேர்த்து நன்கு கிளறி கொள்ளலாம். இறுதியாக உப்பு சரி பார்த்து கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கினால் சுவையான தேங்காய் அரைச்சு விட்ட தக்காளி சாதம் தயார்.