கோவில்களில் மட்டுமே ஸ்பெஷலாக வழங்கப்படும் கல்கண்டு பொங்கல்! தித்திப்பான ரெசிபி இதோ…

விசேஷ நாட்களில் வீட்டில் எவ்வளவு விதமான இனிப்பு வகைகள் செய்தாலும் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் இனிப்பிற்கு தனி மவுசுதான். அதிலும் சர்க்கரைப் பொங்கலுடன் போட்டி போடும் அளவிற்கு தித்திப்பான சுவையில் நெய் மணக்கும் வாசத்துடன் சிறிதளவு கொடுக்கப்படும் அந்த கற்கண்டு பொங்கல் இனிமையோ இனிமைதான். வாங்க அந்த கோவில் ஸ்பெஷல் கற்கண்டு பொங்கல் நம் வீட்டிலேயே செய்து சாப்பிட எளிமையான ரெசிபி இதோ.

முதலில் அரைக்கப் பச்சரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து அரைமணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து மீண்டும் சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம்.

அரைக் கப் பச்சரிசிக்கு ஒரு கப் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக இரண்டு கப் தண்ணீர் பச்சரிசி இவற்றை ஒன்றாக சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் இரண்டு சிட்டிகை அளவு குங்குமப்பூ சேர்த்து மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் பச்சரிசியுடன் பாசிப்பருப்பு சேர்க்க ஆசைப்படும் நபர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

மூன்று விசில்கள் வந்ததும் குக்கரின் அழுத்தம் குறைந்ததும் சாதத்தை மீண்டும் மசித்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து வேகவைத்த சாதத்தையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் முக்கால் கப் கற்கண்டில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

தோசை தான் வேண்டும்… ஆனால் ஹெல்தியான தோசையாக இருக்க வேண்டும்! ரெசிபி இதோ..

இப்பொழுது கிடாயில் சாதத்துடன் கற்கண்டு கரைசலை சேர்த்து கிளற வேண்டும். கற்கண்டு சேர்த்த பிறகு சாதத்தை கைவிடாமல் தொடர்ந்து ஐந்து நிமிடம் கிளற வேண்டும். நல்ல கெட்டி பதத்திற்கு வரும் நேரத்தில் நெய்யில் வறுத்த 10 முந்திரி பருப்பு மற்றும் திராட்சை பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக வாசனைக்கு அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டு தேக்கரண்டி நெய் கலந்து இறக்கினால் சுவையான கற்கண்டு சாதம் தயார். கோவில்களில் மட்டுமே பிரசாதமாக வழங்கப்படும் இந்த சாதம் நம் வீட்டு விசேஷ நாட்களில் செய்து குடும்பத்தில் உள்ளவர்களை அசத்தலாம்.