கடையில் வாங்குவது போல மொறு மொறு பிரெஞ்சு ப்ரைஸ்! வீட்டில் செய்யலாம் வாங்க…

பெரிய ரெஸ்டாரண்டுகள் அல்லது ஹோட்டல்களில் மட்டுமே கிடைக்கும் முறுமுறு ப்ரெஞ்ச் ப்ரைஸ் குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்று. எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாத வண்ணம் இருக்கும் இந்த பிரெஞ்ச் ப்ரைஸ் நம் வீட்டில் செய்யும் பொழுது கடைகளில் கிடைப்பது போல அதே முறுமுறுப்புடன் செய்ய முடிவதில்லை. இந்த முறை எளிமையான டிப்ஸ் வைத்து முறுமுறு பிரெஞ்ச் ப்ரைஸ் அதுவும் வீட்டிலேயே செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

முதலில் நல்ல பெரிய உருளைக்கிழங்குகளாக இரண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து தோல் பகுதிகளை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு உருளைக்கிழங்குகளை நீள நீள துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.

இப்போது நறுக்கிய உருளைக்கிழங்குகளை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இட்லி தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி பரப்பிக் கொள்ள வேண்டும். இதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்குகளை சேர்த்து இரண்டு நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும்.

இரண்டு நிமிடம் கழித்து வேகவைத்த உருளைக்கிழங்குகளை எடுத்து வெள்ளைத் துணியில் பரப்பி தண்ணீரை துடைத்துக் கொள்ளலாம். இப்பொழுது மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். இந்த முறை இரண்டு விதமான மசாலா கலவையை தயார் செய்து கொள்ளலாம்.

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு, ஒரு தேக்கரண்டி கான்பிளார் மாவு, கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதில் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம்.

மற்றொரு முறையில் ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு, ஒரு தேக்கரண்டி காம்ப்ளார் மாவு, ஒரு தேக்கரண்டி சில்லி ஃபிளக்ஸ், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் நாம் வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

இப்பொழுது நாம் தயார் செய்து வைத்திருக்கும் இரண்டு மசாலாவையும் ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் குளிர வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து அதே குளிர்ச்சியுடன் உருளைக்கிழங்குகள் இருக்கும் பொழுது என்னையும் சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சூப்பரான கடலை கறி… அதுவும் வேர்கடலை வைத்து! ரெசிபி இதோ…

இன்னும் பின்னும் பொன்னிறமாக புரிந்து வந்ததும் தனியாக ஒரு தட்டிற்கு மாற்றி விடலாம். இப்பொழுது சுவையான பிரெஞ்ச் ப்ரைஸ் தயார். இப்படி சமைக்கும் பொழுது கடைகளில் கிடைப்பது போல முறுமுறுவென உருளைக்கிழங்கு பிரெஞ்ச் ப்ரைஸ் இருக்கும்.