மாலை நேரங்களில் டீ மற்றும் காப்பியுடன் சிற்றுண்டி உணவாக ஸ்னாக்ஸ் வகைகள் எடுத்துக் கொள்வது வழக்கம். அப்பொழுது வடை, பஜ்ஜி, முறுக்கு, போண்டா என வீட்டிலேயே செய்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமான ஒன்று. இந்த முறை உருளைக்கிழங்கு வைத்து மட்டும் போண்டா செய்யாமல் அதற்கு பதிலாக மாவுச்சத்து நிறைந்த மரவள்ளிக்கிழங்கு வைத்து ஒருமுறை போண்டா செய்து பாருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்ட இந்த மரவள்ளி கிழங்கு போண்டா எளிமையான முறையில் நம் வீட்டில் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
நல்ல தரமான விளைந்த மரவள்ளிக்கிழங்கை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் தோல் பகுதியை நீக்கி கழுவி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து இரண்டு விசில்கள் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் மூன்று பல் வெள்ளை பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வேகவைத்த கிழங்கில் இருந்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக அந்த கிழங்கை நன்கு மசித்து மாவு போல மாற்றிக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி எடுத்து சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் அரைத்த கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம். இந்த நேரத்தில் வேகவைத்து மசித்த மரவள்ளி கிழங்கு மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை சிறிது நேரம் ஆரம்பித்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக போண்டா விற்கு மாவு தயார் செய்து கொள்ளலாம்.
புது மாப்பிள்ளை விருந்தில் மாலை நேர ஸ்நாக்ஸில் கட்டாயம் பரிமாறப்படும் இடியாப்பம் கொத்து பிரியாணி!
ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு, ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு, இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு, கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது நாம் திரட்டி வைத்திருக்கும் உருண்டைகளை போண்டா மாவிற்குள் சேர்த்து நன்கு பிரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். முன்னும் பின்னும் பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால் சுவையான மரவள்ளி கிழங்கு போண்டா தயார். எப்போதும் உருளைக்கிழங்கு போண்டா செய்யாமல் ஒரு முறை இதுபோல மரவள்ளி கிழங்கு வைத்து போண்டா செய்து சுவைக்கலாம்.