ஐந்தே நிமிடத்தில் தயாராகும் ஒன் பாட் பாஸ்தா ரெசிபி இதோ!

பொதுவாக அவசர வேலைகளின் போது ஒன் பாட் ரெஸிபியாக சாம்பார் சாதம், பருப்பு சாதம், பிரியாணி போன்ற ரெசிபிகள் செய்வது வழக்கம். அதிலும் சளி, இருமல் போன்ற உடல் உபாதைகளின் போது ஒன் பாட் ரசம் சாதம் செய்து சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த முறை சற்று புதிதாக ஒன் பார்ட் பாஸ்தா ரெசிபி. அதுவும் இந்த பாஸ்தா ரெசிபி செய்வதற்கு வெறும் ஐந்து நிமிடமே போதுமானது. வாங்க ஒருமுறை இந்த காரசாரமான ஒன் பாட் பாஸ்கர் ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

முதலில் ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய ஐந்து பல் பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெள்ளை பூண்டு பாதியாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி பழம் பாதியாக வதங்கியதும் நமக்கு தேவையான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். அதாவது கேரட், உருளைக்கிழங்கு, சோளம், குடைமிளகாய், பீன்ஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக காரத்திற்கு ஏற்ப ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி பாஸ்தா சீசனிங், அரை தேக்கரண்டி சில்லி பிளக்ஸ், அரை தேக்கரண்டி ஆர்கனோ, ஒரு தேக்கரண்டி டொமேட்டோ சாஸ், ஒரு தேக்கரண்டி பாஸ்தா சாஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம். இந்த கலவையில் நாம் பாஸ்தாவை சேர்த்து கொள்ளலாம். பாஸ்தாவை வேகவைத்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம்.

கிராமத்து ஸ்டைல் அரைத்து விட்ட பாகற்காய் புளிக்குழம்பு! பக்குவம் மாறாத ரெசிபி இதோ…

பாஸ்தா சேர்த்து நன்கு கலந்து கொடுத்த பிறகு ஒரு கப் பாஸ்தாவிற்கு அரை கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக அதன் மேல் பக்கம் இரண்டு சீஸ் துண்டுகளை சேர்த்து கலந்து குக்கரை மூடி விட வேண்டும்.

மிதமான தீயில் இரண்டு விஷங்கள் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான பாஸ்தா தயார். எளிமையான முறையில் ஒன் பார்ட் பாஸ்தா கண்டிப்பாக ஒரு முறை செய்து பாருங்கள்.