இட்லி மற்றும் தோசை என மாறி மாறி சாப்பிடுபவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதை சட்னி வகைகள் தான். ஒரே உணவை திரும்பத் திரும்ப சாப்பிட்டாலும் புது விதமாக சட்னி செய்து சாப்பிடும் பொழுது அதன் ருசியும் சாப்பிட தூண்டும் ஆர்வமும் சற்று அதிகரிக்க தான் செய்கிறது. இந்த முறை நம் வீட்டில் எப்போதும் வைக்கும் சட்னிக்கு பதிலாக சற்று வித்தியாசமாக இட்லி மற்றும் தோசை என இரண்டிற்கும் பொருந்தும் வகையில் அமையும் கதம்பு சட்னி செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம் வாங்க.
ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பு, இரண்டு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு சிறிய கப் அளவிற்கு வேர்கடலை சேர்த்து லேசாக வருத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பதமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 10 சின்ன வெங்காயம், காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் இரண்டு, காய்ந்த வத்தல் ஐந்து சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து இதில் ஒரு சிறிய துண்டு இஞ்சி, 5 பல் வெள்ளை பூண்டு, நன்கு பழுத்த தக்காளி பழம் ஒன்று சேர்த்து வதக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து கைப்பிடி அளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி, சிறிதளவு புதினா இலை சேர்த்து மீண்டும் நன்கு வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் மற்றும் தக்காளி, புதினா இலைகள் நன்கு வதங்கிய பிறகு சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
அனைத்து பொருட்களும் வதங்கும் நேரத்தில் இந்த சட்னிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளலாம். இறுதியாக கைப்பிடி அளவு தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
10 நிமிடத்தில் தயாராகும் ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் பச்சடி !
இப்பொழுது வதக்கிய பொருட்கள் சிறிது நேரம் ஆற வைத்துவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்னி அரைக்கும்பொழுது சற்று கெட்டியாக துவையல் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சாய்ந்த வத்தல், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கிளறினால் சுவையான கதம்ப சட்னி தயார்.