பொதுவாக வாரத்தின் இறுதி விடுமுறை நாட்களில் அசைவ உணவு சமைத்து சூடாக சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வெடுப்பது வழக்கமான ஒன்று. அசைவ விருந்து தடபுடலாக இருக்க வேண்டும் என்பதற்காக சிக்கன் அல்லது மட்டன் அதிகப்படியாக தேர்வு செய்யப்படுகிறது. இந்த முறை மட்டன் வைத்து எப்போதும் ஒரே மாதிரியாக குழம்பு, கிரேவி என செய்யாமல் ஒரு முறை சற்று வித்தியாசமாக மட்டன் உருண்டை செய்து சாப்பிடலாம். ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் சுவையில் அதிரடியான மட்டன் உருண்டை செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
முதலில் மட்டன் உருண்டை செய்வதற்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் அளவு தேங்காய் துருவல், அதே கப்பில் ஒரு கப் அளவிற்கு பொரிகடலை, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், 2 சிறிய துண்டு பட்டை, கிராம்பு மூன்று, கசகசா 2 தேக்கரண்டி, ஒரு பச்சை மிளகாய், இரண்டு காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி மிளகு, ஒரு கொத்து கருவேப்பிலை, அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மசாலா பொருட்களை அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க அவசியம் இல்லை. இப்பொழுது அரைத்த மசாலாவை ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு அதை மிக்ஸி ஜாரில் எலும்பில்லாத மட்டன் கறிகளை சேர்த்து பாதியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதாவது எலும்பு இல்லாத மட்டன் கொத்துக்கறி தயார் செய்து கொள்ள வேண்டும்.
மசாலா எடுத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் அரைத்த கொத்துக்கறியையும் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்து அதே மிக்ஸி சிறிய துண்டு இஞ்சி 2, 15 பல் வெள்ளை பூண்டு, 15 பல் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து விழுதுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் நாம் அதை பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அனைத்து பொருட்களையும் நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு கெட்டியாக சென்று கொள்ள வேண்டும்.
சாப்பிடும்போது வேண்டாம் என ஒதுக்கும் குடைமிளகாய் வைத்து சட்னி ரெசிபி!
இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து விதமாக சூடானதும் நாம் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை அதில் சேர்த்து உண்ணும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை மிதமான தீயில் பொறித்து எடுக்க வேண்டும். பல மணி நேரம் காய்கறிகள் நறுக்காமல் எளிமையான முறையில் மிக்ஸி ஜாரில் மசாலா தயார் செய்து அருமையான மட்டன் உருண்டை தயார்.