தோசை மாவு, சப்பாத்தி மாவு என எதுவும் இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் ஹெல்த்தியான பிரேக் ஃபாஸ்ட் ரெசிபி!

நம் வீடுகளில் தோசை மாவு இல்லாத பொழுது சப்பாத்தி மாவு வைத்து சப்பாத்தி, பூரி, அல்லது கோதுமை அடை செய்வது தான் வழக்கம். ரெடிமேடாக கிடைக்கும் இந்த சப்பாத்தி மாவு வைத்து உடனடியாக காலை அல்லது மாலை பொழுது சமையல் வேலைகளை முடித்து விடலாம். ஆனால் இந்த முறை தோசை மாவு மற்றும் சப்பாத்தி மாவு இல்லாமல் நொடியில் தயாராகும் ஹெல்த்தியான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

ஒரு அகலமான கடாயில் ஒரு கப் ரவை சேர்த்து வாசனை வரும்வரை வறுக்க வேண்டும். ரவை நன்கு வேறுபட்டு சற்று நிறம் மாறத் துவங்கியதும் அடுப்பை அணைத்து ரவையை தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த ரவையுடன் அரை தேக்கரண்டி உப்பு, இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு, ஒரு கப் தயிர் சேர்த்து முதலில் இந்த கலவையை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதை அடுத்து மாவிற்கு தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு பிசைந்து கொடுத்து பத்து முதல் 15 நிமிடம் அப்படியே ஓரமாக வைக்க வேண்டும்.

15 நிமிடம் கழித்து பார்க்கும் பொழுது மாவு நன்கு கெட்டி படத்தில் இருக்கும். இதில் ஒரு தேக்கரண்டி சீரகம், நன்கு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை, ஒரு கொத்து கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், துருவிய ஒரு கேரட், துருவிய ஒரு சிறிய பீட்ரூட், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.

காராமணி வைத்து எப்படி சமைப்பது என தெரியவில்லையா? வாங்க சுவையான காராமணி வேர்க்கடலை பொரியல் ரெசிபி!

நாம் தயார் செய்யும் இந்த மாவு மிகவும் தண்ணீராகவும் இல்லாமல் சற்று கெட்டியாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் இறுக்கமாக இருக்க வேண்டும். இப்பொழுது தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடு படுத்தியதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை கல்லில் சேர்த்து அடை போல தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு பக்கமும் எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால் நிமிடத்தில் சுவையான மற்றும் ஹெல்த்தியான தோசை தயார். இந்த தோசைக்கு எந்தவிதமான சட்னியாக இருந்தாலும் சரி அல்லது சாம்பாராக இருந்தாலும் சரி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.