தீபாவளி என்றால் இனிப்பு பலகாரம் மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் அதிகமாக இனிப்பு பலகாரங்களை மட்டுமே சாப்பிடும் பொழுது சில நேரங்களில் திகட்டல் ஏற்படலாம். அந்த நேரங்களில் காரசாரமாக முறுமுறுவென தட்டை, முறுக்கு போன்ற பொருட்களை சாப்பிட தோன்றும். இந்த வருடம் தீபாவளிக்கு முறுமுறுவென வாசனை மிகுந்த தட்டை செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
ஒரு அகலமான கடாயில் இரண்டு கப் அரிசி மாவு வெறுமையாக சேர்த்து கோலமாவு பதத்திற்கு நன்கு கொரகொரப்பாக வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அரிசி மாவு அளந்து எடுத்துக்கொண்ட அதே அளவுகோலில் அரைக்கப் பொரிகடலை எடுத்து மாவு செய்து கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் நன்கு பொடித்த பொறிகடலை மாவை வறுத்து வைத்திருக்கும் அரிசி மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் மாவிற்கு தேவையான அளவு உப்பு, இரண்டு மணி நேரம் ஊற வைத்த கைப்பிடி அளவு கடலைப்பருப்பு, அதே கைப்பிடி அளவு வறுத்த வேர்க்கடலை, இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரின் காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு காய்ந்த வத்தல் சேர்த்து கொரகொரப்பாக அமைத்துக் கொள்ளவும். அதனுடன் 10 பல் பூண்டு, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து மீண்டும் ஒருமுறை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அரைத்த விழுதுகளை நாம் மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைய வேண்டும்.
மாவு பிசைந்து கொள்ளும் பொழுது கைப்பிடி அளவு கறிவேப்பிலை பொடியாக நறுக்கி சேர்த்து திசை தான் சட்டை வாசனையாக இருக்கும். சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக மாவு தயாரானதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவில் திரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அருமையான தீபாவளி பலகாரம் 10 நிமிடத்தில் தயார்! மினி ஜிலேபி செய்வதற்கான ரெசிபி இதோ…
ஒரு அகலமான கடாயில் பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்கு சூடானதும் நாம் திரட்டி வைத்திருக்கும் தட்டையினை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். முன்னும் பின்னும் நன்கு பொன்னிறமாக மாறியதும் வெளியே எடுத்து விட வேண்டும்.
இப்பொழுது சுவையான காரசாரமான தட்டை தயார். இனிப்பு சாப்பிட முடியாமல் இருப்பவர்களுக்கும் இனிப்பு அவ்வளவு பிடிக்காதவர்களுக்கும் இந்த தட்டை தீபாவளிக்கு சிறந்த பலகாரமாக இருக்கும்.