கோதுமை மாவு வைத்து எப்பொழுதும் சப்பாத்தி மற்றும் பூரி தானா? குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த லட்டு செய்வதற்கான ரெசிபி இதோ!

பொதுவாக நம் வீடுகளில் கோதுமை மாவு வைத்து பூரி, சப்பாத்தி அல்லது கோதுமை தோசை செய்வது வழக்கம். இதை தவிர்த்தல் அதிகப்படியாக எந்த ரெசிபிகளும் கோதுமை மாவு வைத்து செய்வது இல்லை. இந்த முறை பூரிக்கு பதிலாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பு சுவை நிறைந்த லட்டு செய்யலாம் வாங்க. அதுவும் கோதுமை மாவு வைத்து எளிமையான முறையில் லட்டு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் 10 முதல் 15 முந்திரி பருப்பு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் மீதம் இருக்கும் நெய்யில் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து வறுக்க வேண்டும்.

மிதமான தீயில் கோதுமை மாவில் இருந்து பச்சை வாசனை செல்லும்வரை வறுத்துக் கொள்ளலாம். அதாவது குறைந்தது ஐந்து முதல் ஏழு நிமிடம் வறுத்துக்கொள்ள வேண்டும். இப்படி நன்கு வருத்த கோதுமை மாவை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி சிறிது நேரம் ஆரம்பிக்க வேண்டும்.

அந்த நேரத்தில் அதை அகலமான கடாயில் ஒரு கப் கோதுமை மாவிற்கு அரை கப் வெல்லம் என்ற விதத்தில் வெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரை கப் வெல்லத்திற்கு அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

இரத்த சோகையை சரி செய்து, முகத்தை பளபளப்பாக மாற்றும் நேந்திர பழம் வைத்து அருமையான கொழுக்கட்டை ரெசிபி!

வெல்ல கரைசல் கொதித்து வரும் நேரத்தில் நன்கு வறுத்த வேர்க்கடலை அரைக்கப் எடுத்து தோள்களை நீக்கி சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொடி செய்த வேர்க்கடலை மாவு மற்றும் நன்கு வறுத்த கோதுமை மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

வெல்லம் நன்கு கரைந்து கொதித்து வரும் நேரத்தில் இந்த மாவை கடாயில் சேர்த்து கிளற வேண்டும். மாவை சேர்க்கும் பொழுது சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கிளற வேண்டும். மொத்தமாக சேர்க்கும் பட்சத்தில் சில நேரங்களில் கட்டிகள் விழ வாய்ப்புள்ளது.

மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடம் கைவிடாமல் தொடர்ந்து கிளற வேண்டும். வெல்லத்தில் உள்ள தண்ணீர் நன்கு வற்றி கோதுமை மாவு கெட்டி பதத்திற்கு வந்தவுடன் நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம்.

இறுதியாக வாசனைக்காக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கிக் கொள்ள வேண்டும். நாம் தயார் செய்து வைத்திருக்கும் கோதுமை மாவு சிறிது நேரம் ஆறியதும் லட்டு போல உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். கையில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு உருண்டைகளாக பிடிக்கும் பொழுது லட்டு கூடுதல் சுவையுடனும் வாசத்திலும் இருக்கும். பத்தே நிமிடத்தில் சுவையான கோதுமை மாவு லட்டு தயார்.