இரண்டு உருளைக்கிழங்கு போதும்.. ரவா ரோஸ்ட் போல மொறு மொறு தோசை செய்வதற்கான ரெசிபி இதோ!

இரண்டு உருளைக்கிழங்கு இருந்தால் பொதுவாக தோசை செய்யும் பொழுது மசால் தோசை செய்வது \தான் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த முறை சற்று வித்தியாசமாக உருளைக்கிழங்கு வைத்து ரவா ரோஸ்ட் போல முறுமுறு தோசை செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் இந்த தோசை உடன் சேர்த்து சாப்பிடும் காரசாரமான சைடிஸ் ரெசிபியும் இதோ…

தோசை பிரியர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் வரப் பிரசாதமாக இருக்கும். உருளைக்கிழங்கு வைத்து மசால் தோசை செய்யாமல் சற்று வித்தியாசமாக உருளைக்கிழங்கில் தோசை செய்யும் ரெசிபி இது. முதலில் இரண்டு உருளைக்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து தோள்களை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கியது, காரத்திற்கு ஏற்ப இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அரைத்த விழுதுகளுடன் ஒரு கப் ரவை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த உருளைக்கிழங்கு மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
இந்த கலவையில் மீண்டும் அரைக்கப் அரிசி மாவு சேர்த்து கூடுதலாக தண்ணீர் கலந்து நல்ல தண்ணியாக கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி சில்லி பிளக்ஸ், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக மாவின் அளவுக்கு ஏற்ப உப்பு கலந்து கொள்ளலாம். இந்த மாவு ரவா தோசை செய்வது போல தண்ணியான பதத்தில் இருக்க வேண்டும். இப்பொழுது தயார் செய்த மாவை ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விடலாம்.

இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஐந்து பல் வெள்ளைப்பூண்டு, சிறிய எலுமிச்சை பழ அளவு புளி, காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் 8 காய்ந்த வத்தல் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

தலைக்கு தேய்த்து குளிக்கும் கற்றாழை வைத்து தித்திப்பான வாயில் வைத்ததும் கரையும் அல்வா ரெசிபி!

கருவேப்பிலை சேர்த்து தாளிப்பு நன்கு பொறிந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் காரச் சட்னியில் சேர்த்துக் கொள்ளலாம். சட்னிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தான் சட்னி தயார்.

ஐந்து நிமிடம் கழித்து தோசை கல்லை அடுப்பில் வைத்து ரவா தோசை செய்வது போல இந்த உருளைக்கிழங்கு ரவா தோசை செய்தால் அருமையாக இருக்கும். மாவை கெட்டியாக ஊற்றாமல் மிகவும் லேசாக ஊற்றி நல்லெண்ணெய் சேர்த்து முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரவா தோசை தயார். இந்த ரவா தோசைக்கு காரச் சட்னி வைத்து சாப்பிடும் பொழுது அருமையாக இருக்கும்.