மதுரை மல்லிகை பூ மாதிரி காஞ்சிபுரத்தில் கிடைக்கும் கோவில் இட்லியும் தனி ஸ்பெஷல் தான்! அருமையான பந்து போல காஞ்சிபுரம் கோவில் இட்லி செய்வதற்கான ரெசிபி இதோ!

ஒவ்வொரு ஊருக்கும் தனி சிறப்பு உண்டு. மதுரை என்றாலே முதலில் நம் மனதில் நினைவுக்கு வருவது மல்லிகைப்பூ. அதை அடுத்து மதுரையில் அனைத்து கறிவிருந்தும் தலைசிறப்பாக இருக்கும். மல்லிகை பூ மாதிரி இட்லி சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள் மதுரையை பெரும்பாலும் விரும்புவார்கள்.

மதுரையை அடுத்து இட்லிக்கு மிகவும் பிரசித்தி பெற்ற இடம் காஞ்சிபுரம். இங்கு கோவில்களில் வழங்கப்படும் இட்லிக்கு தனி வரலாறு உள்ளது. இந்த இட்லியின் சுவையும் சாதாரண இட்லியை போல அல்லாமல் சற்று மாறுதலாகவும் சாப்பிடும் ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் அமைந்திருக்கும். அந்த வகையில் காஞ்சிபுரம் கோயில் இட்லி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த இட்லி செய்வதற்கு முதலில் நாம் அரிசி மற்றும் உளுந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து என்ற வீதத்தில் நாம் உளுந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ பச்சரிசி, 200 கிராம் கருப்பு உளுந்து, ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைக்க வேண்டும்.

குறைந்தது 4 மணி நேரம் அரிசி மற்றும் பருப்பை நாம் ஊற வைக்க வேண்டும். 4 மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்து ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு உப்பு கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி முந்திரிப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சுக்கு பொடி சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக கைபிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.

கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். அதன் பின் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி இந்த தாளிப்பை 8 மணி நேரம் புளித்த மாவுடன் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மாவு இட்லி மாவு பதத்தை விட சற்று இறுக்கமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த இட்லி மாவை மந்தாரை இலை அல்லது கோவில்களில் பிரசாதம் வழங்கும் தொன்னையில் இட்லி அளவுக்கு ஊற்றி இட்லி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும்.

அட இந்த குழம்பு ஒன்று போதும் மூன்று நாளைக்கு கவலையே வேண்டாம்! நம் வீட்டில் செய்தால் ஒரே மணக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு ரெசிபி இதோ!

குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு நீர் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார். இந்த இதிலியில் மிளகு, சீரகம், சுக்கு பொடி சேர்த்து இருப்பதால் சுமையானதாக மட்டுமில்லாமல் மருத்துவ குணம் நிறைந்ததாகவும் இருக்கும். எப்பொழுதும் ஒரே போல இட்லி செய்யாமல் இது போன்ற வித்தியாசமான இட்லி செய்து சாப்பிடும் பொழுது சாப்பிடும் ஆர்வத்தையும் தூண்டிவிடும்.

இந்த காஞ்சிபுரம் இட்லியின் தேவையான உப்பு மற்றும் காரம் இருப்பதால் இதற்கு சைட் டிஷ் ஆக இட்லி பொடி அல்லது தேங்காய் சட்னி அல்லது காரம் குறைவான தக்காளி சட்னி வைத்து சாப்பிடும் பொழுது சிறப்பாக இருக்கும்.