பல காய்கறிகள் சேர்த்து சாம்பார் வைத்தாலும் பக்கத்தில் நிற்க முடியாது… அருமையான பூ சாம்பார் ரெசிபி!

சாம்பார் சுவையாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அதனுடன் சேர்க்கப்படும் காய்கறிகள் தான். பலவிதமான காய்கறிகள் தரமான புளிப்பு சுவை, அளவான காரம், சத்து நிறைந்த பருப்பு சேர்த்து இந்த முறையில் சாம்பார் சமைக்கும் பொழுது மட்டுமே அந்த சாம்பார் சிறப்பான சாம்பாராக மாறிவிடுகிறது. இப்படி இருக்க காய்கறிகளை மட்டுமே பயன்படுத்தி சாம்பார் செய்யாமல் இந்த முறை வாழைப்பூ வைத்து அருமையான சாம்பார் செய்யலாம் வாங்க… இந்த வாழைப்பூ சாம்பார் செய்வதற்கான ரெசிபி இதோ…

வாழைப்பூ வைத்து சாம்பார் செய்வதற்கு முதலில் வாழைப்பூவை நன்கு கழுகு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். துண்டுகளாக நறுக்கிய வாழைப்பூவை அரிசி கடைந்த தண்ணீர் அல்லது மோருடன் சேர்த்து வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, இரண்டு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய தக்காளி சேர்த்துக் கொள்ளவும். தக்காளி நன்கு வதங்கியதும் நாம் நறுக்கி வைத்திருக்கும் வாழைப்பூவை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் தேவைப்பட்டால் முருங்கைக்காய், கத்தரிக்காய், கேரட், உருளைக்கிழங்கு, சௌசௌ என நமக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது காய்கறி மற்றும் வாழைப்பூவை எண்ணெயோடு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். காய்கறிகள் பாதியாக வதங்கியதும் இரண்டு டம்ளர் தண்ணீர், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.

இந்த கலவையில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்து காய்கறிகள் வந்து வருவதற்கு மூடி போட்டு வேக வைக்க வேண்டும். மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் காய்கள் வெந்து வருவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

வெண்டைக்காயா… வளவள கொல கொலன்னு இருக்கும் வேணாம் அப்படின்னு சொல்றவங்களுக்கு தான் இந்த ரெசிபி!

15 நிமிடம் கழித்து வேகவைத்த துவரம் பருப்பு ஒரு கப் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு சேர்த்து பத்து நிமிடம் மீண்டும் ஒருமுறை மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இப்பொழுது தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்துக் கொள்ளலாம். இறுதியாக அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான வாழைப்பூ சாம்பார் தயார்.

இந்த சாம்பார் விளக்கமான சாம்பாரை விட சற்று வாசனையாகவும் வாழைப்பூ சேர்த்து செய்வதால் சுவை அதிகமாகவும் இருக்கும். வாழைப்பூ சாப்பிட மறுக்கும் நபர்களுக்கு இது போன்ற சாம்பார் வைத்து கொடுக்கும் பொழுது சுவையில் மெய் மறந்து சாப்பிட்டு விடுவார்கள்.