ரெஸ்டாரன்ட் ஸ்டைல் காளான் மிளகு மசாலா! இது ஒன்று போதும் தோசை,சப்பாத்தி, பரோட்டா என அடுத்தடுத்து சாப்பிடலாம்!

நம் வீட்டில் சமைக்கும் உணவு எவ்வளவு சுவையானதாக இருந்தாலும் சில வகையான உணவுகள் ரெஸ்டாரண்டில் சாப்பிடும் பொழுது பிரசித்தி பெற்றதாக இருக்கும். அந்த சுவையில் நாம் வீட்டில் சமைக்க ஆசைப்பட்டாலும் பக்குவம் தெரியாமல் சில நேரங்களில் சொதப்புவதும் நடக்கலாம். ரெஸ்டாரண்டுகளில் கிடைக்கும் சைவ உணவுகளில் மிகவும் பிரபலம் அடைந்த காளான் மிளகு மசாலா அனைவருக்கும் பிடிக்கும்.. இந்த ஒரு காளான் மிளகு மசாலா வைத்து பிரியாணி, தோசை, சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கும் வைத்து அருமையாக சாப்பிடலாம். ரெஸ்டாரன்ட் ஸ்டைல் காளான் மிளகு வறுவல் நம் வீட்டிலேயே செய்வதற்கான பக்குவமான ரெசிபி இதோ…

இந்த காளான் மிளகு மசாலா செய்வதற்கு முதலில் ஒரு கப் காலானை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் குடை போல இருக்கும் மேல் பாகத்தை வைத்துவிட்டு கீழே இருக்கும் தண்டு பகுதியை தனியாக வெட்டி எடுத்து விடலாம்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய நான்கு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் வதங்கும் வெங்காயத்தில் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிறமாக மாறியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 3 தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

தக்காளி பாதியாக வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், இரண்டு தேக்கரண்டி தனியா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலாவை கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும். மசாலா கொதிக்கும் நேரத்தில் ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளலாம்.

மசாலா நன்கு கொதித்து கெட்டியாக வரும் நேரத்தில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் காளானை சேர்த்துக் கொள்ளலாம். காளான் சேர்த்த பிறகு கைவிடாமல் மசாலாவை கிளற வேண்டும்.

ஐந்து முதல் பத்து நிமிடங்கள் காளான் மற்றும் மசாலா ஒரு சேர சிலரும் பொழுது காளானில் மசாலா பொருட்கள் சேர்ந்து உப்பு காரம் நன்கு பிடித்து சுவையானதாக மாறாது வாங்கும். மசாலா மீண்டும் கெட்டியாக வரும் நேரத்தில் நாம் முதலில் அரைத்து வைத்திருக்கும் மிளகு மற்றும் சோம்பு தூளை இரண்டு தேக்கரண்டி சேர்த்து மீண்டும் கிளர வேண்டும்.

தட்டு நிறைய பிரியாணி இருந்தாலும் திகட்டாமல் சாப்பிட இது ஒன்று கண்டிப்பாக வேண்டும்? வாங்க கத்திரிக்காய் ரைத்தா ஹோட்டல் சுவையில் செய்வதற்கான ரெசிபி இதோ!

இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய புதினா மற்றும் மல்லி இலை தூவி இறக்கினார் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் காளான் மிளகு பிரட்டல் தயார். இந்த காளான் கிரேவியை சப்பாத்தி, பரோட்டா, தோசை உடன் வைத்து சாப்பிடும் பொழுது எத்தனை சப்பாத்தி சாப்பிடுவோம் என்ற அளவே தெரியாத வண்ணத்தில் சுவையாக இருக்கும்.

மேலும் இந்த காளான் கிரேவியை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அசைவம் சாப்பிடும் சுவையை அப்படியே நாவில் நிலை நிறுத்தும் இந்த காளான் மிளகு கிரேவி.