கோதுமை அல்வா அனைவருக்கும் பிடித்த மிக சுவையான ஒரு இனிப்பு வகை. அல்வாக்களில் விதவிதமாய் பல வகைகள் இருக்கிறது அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமான சுவையாக இருந்தாலும் இந்த கோதுமை அல்வா பரவலாக அனைவருக்கும் பிடித்த ஒன்று. கோதுமை அல்வாவில் கோதுமை, நெய், சர்க்கரை என வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக சுவையாக அல்வாவை செய்ய முடியும். இதை செய்வதற்கு பொறுமையும் சரியான பக்குவமும் தெரிந்திருந்தால் போதும் மிக சுவையான அல்வா செய்துவிடலாம். ஒரு முறை இதை செய்து பார்த்தால் இதன் சுவை கடைகளில் உள்ள அல்வாவை உங்களை வாங்க தோன்றாது. நீங்களே அடிக்கடி வீட்டில் செய்வீர்கள்.
நாவில் எச்சில் ஊறச் செய்யும் கேரட் அல்வாவில் இத்தனை நன்மைகளா…!
கோதுமை அல்வா செய்ய 250 கிராம் அளவு சம்பா கோதுமையை முதல் நாளில் ஊறவைத்து விட வேண்டும். இந்தக் கோதுமை நன்றாக ஊற வேண்டும். ஊறிய கோதுமையை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு வெள்ளை துணியில் போட்டு வடிகட்டி இந்த கோதுமையின் பாலினையும் எடுக்க வேண்டும். மீண்டும் ஒரு முறை இதனை அரைத்து பால் எடுக்க வேண்டும். வடிகட்டிய பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒரு துணியினால் மூடி வைத்து விடவும். சிறிது நேரம் கழித்து அந்தப் பாத்திரத்தை திறந்து பார்த்தால் மேலாக தெளிந்த நீர் இருக்கும் அதன் அடியில் கோதுமை உரைந்து இருக்கும். மேலாக உள்ள தெளிந்த நீரை வடிகட்டி விடவும் அடியில் உறைந்துள்ள கூழ் போல காணப்படும் கோதுமை மாவை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த கோதுமை மாவில் அரை ஸ்பூன் அளவு அல்வா பவுடர் போட்டு வைக்க வேண்டும்.
ஹோட்டல் மற்றும் கல்யாண வீடுகளில் கிடைக்கும் சுவையில் சூப்பரான பிரட் அல்வா!
இப்பொழுது அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்க்கவும். சர்க்கரை பாகு செய்ய 600 கிராம் அளவு சர்க்கரையை இந்த தண்ணீரில் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். பாகு கம்பி பதம் வரவேண்டும். கம்பி பதம் வந்த பின்னர் எடுத்து வைத்திருக்கும் கோதுமை கூழினை சேர்த்து கிளற வேண்டும். கூழ் நன்கு வெந்து வரும் பொழுது 250 கிராம் நெய்யினை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
அட்டகாசமான சுவையில் பாதாம் அல்வா… இப்படி செய்து பாருங்கள்!!!
கைவிடாமல் கிளறி அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். அல்வா சுருண்டு வந்ததும் இறக்கி விடலாம். இப்பொழுது ஒரு தட்டில் நெய் தடவி அல்வாவை அந்தத் தட்டில் போட்டு சமப்படுத்திக் கொள்ளவும் தேவையான நட்ஸை பொடியாக நறுக்கி அதனை வறுத்து அல்வா மீது சம அளவில் தூவிக் கொள்ளவும் அல்வா ஆறிய பின்பு வேண்டிய வடிவில் இதில் துண்டுகள் போட்டு பரிமாறலாம்.
அவ்வளவுதான் மிக சுவையான கோதுமை அல்வா தயார்!!!