வீட்டுத் தோட்டத்தில் முருங்கைக்காய் கொத்து கொத்தாக உள்ளதா… அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி முருங்கைக்காய் சாதம் செய்யலாம்!

முருங்கை கீரையை போல முருங்கைக்காயிலும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த காயை குழம்பாக சமைக்கும் பொழுது ஒன்று, இரண்டு என சேர்த்துக் கொள்வது. வழக்கம். அதே நேரங்களில் அதிகப்படியாக காய் கிடைக்கும்பொழுது கூட்டு, பொரியல் என வைத்து சாப்பிடலாம். இப்பொழுது சற்று வித்தியாசமான முறையில் முருங்கைக்காய் வைத்து அடிமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக முருங்கைக்காய் சாதம் செய்யலாம். இந்த சாதம் செய்வதற்கான எளிமையான விளக்கம் இதோ..

இந்த முருங்கைக்காய் சாதம் செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், இரண்டு காய்ந்த வத்தல் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

அடுத்து பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு தக்காளி பழத்தை விழுதுகளாக அரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளியின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் கழித்து ஒரு தேக்கரண்டி தனியாத்தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம்.

அதன் பின் நறுக்கி வைத்திருக்கும் முருங்கைக்காயை குக்கரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முருங்கக்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வரை மசாலாக்களுடன் கலந்து முருங்கைக்காயை வதக்க வேண்டும்.

உப்புமாவா? பிடிக்கவே பிடிக்காது என சொல்பவர்கள் கூட வாரத்தில் இரு முறை இதே உப்புமா வேண்டும் என அடம் பிடிக்கும் சுவையின் நொய் அரிசி உப்புமா!

அதன் பின் நாம் அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் அரிசியை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் அரிசிக்கு 2 கப் அளவு தண்ணீர் வீதம் தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து குக்கரை மூடி மூன்று முதல் நான்கு விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும்..

விசில்கள் வந்து குக்கரின் அழுத்தம் குறைந்ததும் திறந்தவுடன் பாதி எலுமிச்சை பழச்சாறு பிழிந்து கிளறினால் சுவையான முருங்கைக்காய் சாதம் தயார். இந்த சாதத்துடன் அப்பளம் வைத்து சாப்பிடும் பொழுது சுவை சிறப்பாக இருக்கும்.