மணத்தக்காளி கீரை மருத்துவக் குணங்கள் நிறைந்த கீரையாகும். வாய்ப்புண், வயிற்றுப்புண் தொந்தரவு உள்ளவர்கள் இந்த மணத்தக்காளி கீரையை சாப்பிட குணமாகும். மேலும் இந்த மணத்தக்காளி கீரையில் வைட்டமின் இ மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனைகள் இளைப்பு பிரச்சனைகள் சரியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் மணத்தக்காளி கீரை உடலில் உள்ள கெட்ட நீரை சிறுநீர் மற்றும் வியர்வை மூலமாக வெளியேற்றக்கூடிய ஆற்றல் நிறைந்ததாக உள்ளது. இந்த மணத்தக்காளி கீரையை வைத்து அருமையான மணத்தக்காளி கீரை மண்டி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
அற்புதங்கள் செய்யும் அகத்திக்கீரை சூப்… வாரம் ஒரு முறை இப்படி செய்து சாப்பிட மறக்காதீர்கள்!
மணத்தக்காளி கீரை மண்டி செய்ய ஒரு கட்டு மணத்தக்காளி கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். 50 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தை காயவைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், உளுத்தம் பருப்பு, இரண்டு வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்த பின்பு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையை போட்டு குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் கீரையை வதக்க வேண்டும். இந்த மணத்தக்காளி கீரை மண்டிக்கு சாதாரண தண்ணீர் ஊற்றுவதை விட அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றினால் மிகவும் நல்லது. அரிசி கழுவிய தண்ணீரை கொஞ்சமாக ஊற்றி கொதிக்க விட வேண்டும். கீரை நன்றாக வெந்ததும் முற்றிய தேங்காயாக பார்த்து ஒரு மூடி துருவி தேங்காய் பால் எடுக்க வேண்டும். அந்த தேங்காய் பாலை ஊற்றி லேசாக கொதி வரும் பொழுது இதனை கிளறி தேவையான அளவு உப்பு போட்டு இறக்கி விடலாம்.
அருமை…! மூட்டு வலி பிரச்சனைகளை முற்றிலும் நீக்கும் முடக்கத்தான் கீரை ரசம்!
அவ்வளவுதான் மருத்துவ குணமிக்க சுவையான மணத்தக்காளி கீரை மண்டி தயார்!