வீட்டில் உள்ளவர்களை அனைவரையும் தன் பக்கம் கைவசப்படுத்த…. சமையலறை ரகசியங்கள் இதோ!

வீட்டில் உள்ள அனைவரின் அன்றாட தேவைகளில் ஒன்று உணவு. இந்த உணவு சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும் பட்சத்தில் அந்த வீடு மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் சமைக்கும் பொழுது சில விஷயங்களை நேர்த்தியாக செய்யும் பொழுது சமைப்பவருக்கு மிகுந்த பாராட்டும் கிடைக்கும். சமையலறையின் ராணியாக இருப்பதற்கான சில ரகசிய டிப்ஸ் இதோ…

பாகற்காய் சமைக்கும் பொழுது நறுக்கிய பாகற்காயுடன் உப்பு, மஞ்சள் தூள், வெல்லம், எலுமிச்சை சாறு இவற்றை கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து அதன் பின் கழுவி சுத்தம் செய்து சமைத்தால் பாகற்காயில் கசப்பு தன்மை இருக்காது.

இட்லி பொடி தயாரிக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி மல்லிகை வறுத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து பொடி செய்தால் இட்லி பொடி வாசமாக இருக்கும்.

உருளைக்கிழங்கு வேகவைக்கும் பொழுது அதை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைத்தால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நன்கு பதமாக வெந்து இருக்கும்.

அவல் உப்புமா செய்யும் பொழுது பயத்தம் பருப்பை பதமாக வேக வைத்து சேர்த்து கலந்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.

பாயாசத்தில் திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை நெய்யில் நன்கு வதக்கி சேர்த்து பாயாசத்தில் கலக்கும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

ரவா தோசை, வெண் பொங்கல் சமைக்கும் பொழுது சீரகத்தை பயன்படுத்துவதற்கு முன் இரு கைகளுக்கு இடையில் சீரகத்தை சேர்த்து நன்கு கசக்கி சமையலுக்கு பயன்படுத்தினால் வாசனை சிறப்பாக இருக்கும்.
சாம்பார், ரசம் இவற்றில் தாளிப்பில் சேர்க்கும் கருவேப்பிலை பொதுவாக வீணாகிவிடும். அதற்கு பதிலாக தயார் செய்யும் பொழுது அதில் கருவேப்பிலையும் சேர்த்து அரைத்து நாம் பயன்படுத்தினால் வயிற்றிற்கு சேரும்.

வெங்காய அடை செய்யும் பொழுது சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வதக்கி தோசை மாவில் கலந்து அடை செய்தால் வாசனை கமகமவென வீடே மணக்கும்.

திருநெல்வேலி ஸ்பெஷல் மாப்பிள்ளை விருந்து உளுந்து சோறு , மட்டன் கறிக்குழம்பு! அசத்தலான ரெசிபி இதோ…
வெண்டைக்காய் சமைக்கும் பொழுது ஒன்றை ஒன்று ஒட்டாமல் இருக்க சமைப்பதற்கு முன் அதில் சிறிது எலுமிச்சை பல சாறு கலந்து கொள்ள வேண்டும்.

வறுத்த வேர்க்கடலையை சிறு துண்டுகளாக்கி பீன்ஸ் மற்றும் மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் சுவை அருமையாக இருக்கும்.