காய்கறிகள் இல்லாமல் குருமா சாப்பிட வேண்டுமா? வாங்க அசத்தலான ஹைதராபாத் ஸ்டைல் பன்னீர் குருமா ட்ரை பண்ணலாம்!

பூரி மற்றும் சப்பாத்திக்கு சைடிஷ் ஆக குருமா வைத்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் சில சமயங்களில் எந்த விதமான காய்கறிகளும் இல்லாமல் என்டி ஆக குருமா வைத்து சாப்பிடவும் சில நேரங்களில் ஆசை வரும். ஆனால் நாம் சாப்பிடும் உணவுகளில் புரோட்டின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளத. அதை சரி செய்வதற்காக பன்னீர் வைத்து அருமையான குருமா செய்வதற்கான ரெசிபி இதோ….

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் காரத்திற்கு ஏற்ப மூன்று பற்றியும் மிளகாய், 10 முதல் 15 முந்திரி பருப்பு, ஒன்றரை தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்து வறுக்க வேண்டும்.

காரம் அதிகமாக தேவைப்பட்டால் பச்சை மிளகாய் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து அதை சூட்டில் லேசாக பிரட்டி கொள்ள வேண்டும்.
அதன் பின் வறுத்த இந்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். பன்னீர் குருமா செய்வதற்கான முக்கியமான மசாலா தற்பொழுது தயார்.

அடுத்ததாக அதை கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். அதில் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி கால் சீரகத்தூள், கால் தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், கால் தேக்கரண்டி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அந்த நேரத்தில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு தக்காளி பழத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி சேர்த்தபின் கடாயை இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு தக்காளி வேகும் வரை பொறுமையாக காத்திருக்கவும். அதன் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து கொதிக்க விட வேண்டும்.

ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பன்னீர் சாப்பிட ஆசையா.. வாங்க நம்ம வீட்டிலேயே சூப்பரான கடாய் பன்னீர் செய்வதற்கான ரெசிபி!

இந்த நேரத்தில் குப்பை மீண்டும் சுவை பார்த்துக் கொள்ளலாம் தேவைப்பட்டால் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையில் ஒரு கொதி வரவும் நம் சதுரகமாக நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை இதில் சேர்த்து கலந்து கொடுத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான பன்னீர் குருமா தயார்.