நினைத்தாலே நாவில் எச்சில் ஊரும் வேர்க்கடலை பால்கோவா!

பால்கோவா என்றாலே இனிப்பு பிரியர்களுக்கு தனி விருப்பம் தான். அதிலும் இந்த பால்கோவா வேர்க்கடலை வைத்து செய்யும் பொழுது சுவையானதாகவும் சத்து நிறைந்ததாகவும் மாறிவிடுகிறது. அப்படி வேர்க்கடலை பார்க்கவா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

வேர்க்கடலை பால்கோவா செய்வதற்கு முதலில் ஒன்றரை கப் வேர்க்கடலையே ஒரு அகலமான கடாயில் சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த வேர்க்கடலையை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி சிறிது நேரம் சூடு ஆற வைக்க வேண்டும்.

வேர்க்கடலையின் சூடு நன்கு ஆறியதும் அதன் தோல்களை நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது சுத்தம் செய்த வேர்க்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடி நன்கு மையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை சற்று பரபரவென இருந்தால் போதுமானது.

அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஒரு கப் தேங்காய் துருவலை அதில் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.


அடுத்து அகலமான ஒரு பாத்திரத்தில் நன்கு வறுத்த வேர்க்கடலை பொடி, வறுத்து தேங்காய், நான்கு தேக்கரண்டி பால் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் அகலமான கடாய் வைத்து அரை லிட்டர் பாலை நன்கு சுண்ட காட்சி கொள்ள வேண்டும்.

பால் சுண்டி வரும் நேரத்தில் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்ததும் நாம் கலந்து வைத்திருக்கும் வேர்க்கடலை மாவை இதனுடன் சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும்.

ஹைதராபாத்தில் மிக பிரபலமான அப்பல்லோ சிக்கன்!

ஏழு முதல் 10 நிமிடங்கள் கைவிடாமல் தொடர்ந்து கலந்து கொடுக்க வேண்டும். இந்த மாவு சற்று இறுகிவரும் நேரத்தில் தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து மீண்டும் கலந்து கொடுக்க வேண்டும். மாவில் ஈரப்பதம் நன்கு வற்றி கேசரி பதத்திற்கு வர வேண்டும்.

இறுதியாக நம் விருப்பத்திற்கு ஏற்ப பாதாம் அல்லது முந்திரிகளை தேவைக்கேற்ப சேர்த்து கொண்டு கிளறி இறக்கினால் சுவையான வேர்க்கடலை பால்கோவா தயார்.