ஊரே மன மணக்கும் கல்யாண வீட்டு மிளகு ரசம்!

கல்யாண வீட்டு விருந்து என்றாலே அறுசுவைக்க பஞ்சம் இருக்காது. கூட்டுப் பொரியல், இனிப்பு வகைகள் என பலவகையான பதார்த்தங்களுடன் தொடங்கும் இந்த கல்யாணப் பந்தி ரசத்துடன் தான் முடிவடைகிறது. அப்படி அனைத்து வகையான உணவுகளும் சாப்பிட்ட பின் இறுதியாக நாம் சாப்பிடும் ரசம் சாதம் உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் விதத்திலும் நாக்கின் சுவையை நிலைத்திருக்கும் பதற்றிலும் அமைந்திருக்க வேண்டும். அப்படி ஒரே மனக்கும் கல்யாண வீட்டு மிளகு ரசம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி துவரம் பருப்பு, அரை தேக்கரண்டி மல்லி, அரை தேக்கரண்டி மிளகு, காரத்துக்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து காய்ந்த வத்தல் சேர்த்து முதலில் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் ஒன்றரை தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைத்து விடவும். சீரகம் சேர்த்தபின் சில நொடிகளில் அடுப்பை அணைத்து விடலாம். இருக்கும் வெப்பத்திலேயே சீரகம் நன்கு பொறிந்து வாசனை வந்துவிடும்.

வறுத்த இந்த பொருட்களை சில நிமிடங்கள் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீ விருப்பப்பட்டால் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

நல்லெண்ணெய் சூடானதும் நான்கு காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். கடுகு நன்கு பொரிந்ததும் பத்து வெள்ளைப் பூண்டு தோல் உரித்து தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளைப்பூண்டு பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக இரண்டு நன்கு பழுத்த தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும். தக்காளி பழத்தை எண்ணெயோடு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

ஆந்திரா ஸ்பெஷல் சுரக்காய் அப்பலோ! அசத்தலான ரெசிபி இதோ!

தக்காளி வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி பழம் நன்கு வதங்கியதும் ஊற வைத்திருக்கும் எலுமிச்சை பழ அளவு புளியை நன்கு கரைத்து ஒரு கப் புளி கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தேவையான அளவு தண்ணீர் ஒரு தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து ரசத்தை நன்கு சூடு படுத்த வேண்டும். ரசம் நன்கு கொதித்து பொங்கி வரும் நேரத்தில் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு ஒரு கப் சேர்த்துக் கொள்ளவும்.

இப்பொழுது நாம் முதலில் வறுத்து அரைத்த பொடியில் இதனுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்தது. ரசம் நன்கு சூடாகி ஒரு கொதி வரும் நேரத்தில் பொடியாக நறுக்கிய கைப்பிடி அளவு மல்லி, ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடலாம்.