விசேஷ நாட்களில் இனிப்பு வகைகள் செய்வது வழக்கம். அப்படி செய்யும் இனிப்பு வகைகள் எப்போதும் போல சக்கரை பொங்கல், பாயாசம் என ஒரே இனிப்பு வகைகள் செய்யாமல் இந்த முறை சற்று வித்தியாசமாக கந்தரப்பம் செய்து கொடுத்து பாருங்கள். அதன் சுவையில் வீட்டில் உள்ளவர்கள் மயங்கி மீண்டும் வேண்டும் என கேட்கும் அளவிற்கு அதன் சுவை அமைந்திருக்கும்.
இந்த அப்பம் செய்வதற்கு ஒரு கப்பில் முக்கால் கப் அளவிற்கு பச்சரிசி எடுத்துக்கொள்ள வேண்டும். மீதி இருக்கும் அளவில் உளுந்து சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு கழுவி சுத்தம் செய்து குறைந்தது 45 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 45 நிமிடங்கள் கழித்து ஊறவைத்த இந்த அரிசி மற்றும் உளுந்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாத வண்ணம் அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் எந்த கப் கொண்டு அரிசி மற்றும் உளுந்து அளந்து எடுத்தோமோ அதே கப்பில் ஒரு கப்பிற்கு அச்சு வெல்லம், ஒரு கப் தேங்காய் துருவல், வாசனைக்காக மூன்று முதல் நான்கு ஏலக்காய் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
வெல்லம் மற்றும் தேங்காய் அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அரைத்த இந்த தேங்காய் அச்சுவெல்ல விழுது மற்றும் அரிசி உளுந்து கலவையை முதலில் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் இனிப்பு சுவையை சற்று அதிகரிப்பதற்காக கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.. இப்பொழுது அப்பம் செய்வதற்கான மாவு தயாராக உள்ளது.
கோடை காலத்திலும் சளி தொல்லையா? அருமையான வீட்டு மருந்து வெற்றிலை பூண்டு சாதம்…
ஒரு அகலமான பாத்திரத்தில் பொரித்தெடுப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி விதமாக சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் நன்கு சூடானதும் நாம் கரைத்து வைத்திருக்கும் மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக ஊற்றி முன் பின் என இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை பொறுத்து எடுக்க வேண்டும். இந்த மாவு இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் இடைப்பட்ட பதத்தில் இருக்க வேண்டும். மிகவும் கெட்டியாக இருக்கக் கூடாது மிகவும் தண்ணீராகவும் இருக்கக்கூடாது.
இப்பொழுது இரண்டு புறமும் நன்கு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் கந்தரப்பம் தயார்.