பத்து நிமிடத்தில் சுவையான டிபன் சாம்பார் ரெசிபி!

தினமும் காலை உணவாக இட்லி மற்றும் தோசை கொடுத்தாலும் அதற்கு சைடிஷ்ஷாக கொடுக்கும் சட்னி மற்றும் சாம்பார் சுவையாக இருந்தால் குழந்தைகள் சலிப்பு தட்டாமல் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். அந்த வகையில் மிக சுவையான டிபன் சாம்பார் எளிமையான முறையில் நம் வீட்டில் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்களே அசத்துவதற்கான ரெசிபி இதோ!

முதலில் ஒரு குக்கரில் கால் கப் துவரம் பருப்பு, கால் கப் பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 10 முதல் 15 தோல் உரித்த சின்ன வெங்காயம், இரண்டு சிறிய தக்காளி பழம் பொடியாக நறுக்கியது, இரண்டு கப் நம் வீட்டில் உள்ள காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு கேரட், உருளைக்கிழங்கு, 5 பீன்ஸ், பாதி சௌசௌ, ஒரு முள்ளங்கி, ஒரு சிறிய துண்டு சுரைக்காய், 5 அவரக்காய், ஒரு முருங்கைக்காய் என நமக்கு விருப்பமான காய்கறிகளை தேர்வு செய்து நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

காய்கறிகளுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து காய்கறிகள் முழுகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பருப்பு மற்றும் காய்கறிகள் நன்கு குழைவாக வந்திருக்க வேண்டும். அடுத்ததாக ஒரு தாளிப்பு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு உளுத்தம் பருப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை, ஒரு காய்ந்த வத்தல் சேர்த்து தலித்துக் கொள்ளவும். கடுகு நன்கு புரிந்த பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும். தாளிப்பு கடாய் இருக்கும் அதே சூட்டில் ஒரு தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த தாளிப்பை நாம் வேக வைத்திருக்கும் பருப்பில் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். சாம்பார் மேலும் கெட்டியாக வேண்டும் என நினைத்தால் ஒரு தேக்கரண்டி கடலை மாவு தண்ணீருடன் நன்கு கட்டிகள் விழாத வண்ணம் கரைத்து இதில் ஊற்றிக் கொள்ளலாம்.

சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு ஏற்ற ஒரே சைடிஷ்! வெஜிடபிள் சால்னா! அருமையான ரெசிபி!

கடலை மாவு சேர்ப்பது அவரவரின் விருப்பமே. இப்பொழுது சாம்பார் நன்கு கொதித்து வரும் பொழுது கைப்படி அளவு பொடியாக நறுக்கிய கொத்த மல்லி தலை தூவி இறக்கினால் சுவையான டிபன் சாம்பார் தயார்.

இந்த சாம்பார் காலை இட்லி தோசைக்கு மட்டுமில்லாமல் சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுதும் சுவை அருமையாக இருக்கும்.