ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக டீக்கடை ஸ்டைல் திகட்டாத இனிப்பு போண்டா!

மாலை நேரங்களில் நொறுக்குத் தீனி சாப்பிட தோன்றும் பொழுது இந்த டீக்கடை ஸ்டைல் திகட்டாத இனிப்பு போண்டா ஒரு முறை செய்து பாருங்கள். இதன் சுவையில் குழந்தைகள் மெய்மறந்து மீண்டும் மீண்டும் வேண்டும் என கேட்கும் அளவிற்கு அருமையாக இருக்கும். மிதமான இனிப்பு மட்டுமே இதில் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடலாம். இந்த இனிப்பு போண்டா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!

இந்த போண்டா செய்வதற்கு ஒரு கப் உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரத்திற்கு முன்பதாக ஊற வைத்து விட வேண்டும். அதன் பின் நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரைக்கப் சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸி ஜாரில் சர்க்கரை சேர்த்து அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் வாசனைக்காக இரண்டு ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். அரைத்த இந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அதனுடன் இரண்டு முதல் மூன்று தேசரண்டி அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.

உளுந்து மாவு தண்ணியாக இருந்தால் மேலும் ஒரு கரண்டி அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம். அரிசி மாவுக்கு பதிலாக இரண்டு தேக்கரண்டி ரவை சேர்த்தால் போண்டா முறுமுறுப்பாக இருக்கும். இதில் சுவைக்காக அரை தேக்கரண்டி எள் சேர்த்துக் கொள்ளலாம். எள்ளு சேர்த்துக்கொள்வது உங்கள் விருப்பமே. மாவு நன்கு கலந்ததும் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு படுத்த வேண்டும்.

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு ஏற்ற உருளைக்கிழங்கு கார மசாலா!

இதில் நாம் கலந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக சேர்த்து பொறிக்க வேண்டும். ஒருபுறம் பொன்னிறமாக நன்கு வெந்ததும் மாற்றி மற்றொருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான மற்றும் சத்து நிறைந்த இனிப்பு போண்டா தயார். பஞ்சு மாதிரி மிக மென்மையாக இருக்கும் இந்த இனிப்பு போண்டா குழந்தைகளுக்கு பிடித்தமான நொறுக்கு தீனிகளில் ஒன்றாக உள்ளது.