சாம்பாரின் சுவையை பல மடங்கு அதிகரிக்கும் கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்!

பலவிதமான காய்கறி, பருப்பு சேர்த்து சுவையான சாம்பார் செய்தாலும் சில நேரங்களில் நாம் வைக்கும் சாம்பார் காரசாரம் இல்லாமல் வெறுமையாக இருக்கும். நாம் வைக்கும் சாம்பார் சுவையிலும் வாசத்திலும் அருமையாக இருக்க அதில் இரண்டு முருங்கைக்காய் மட்டும் சேர்த்தால் போதும். முருங்கைக்காய் சேர்த்து சாம்பார் வைக்கும் பொழுது தெரு மணக்கும் வாசமும், பல ஊட்டச்சத்துகளும் நிறைந்து வீட்டில் உள்ளவர்களை எளிதில் திருப்தி படுத்த முடியும். இந்த முருங்கைக்காய் சாம்பார் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!

முருங்கைக்காய் சாம்பார் செய்வதற்கு முதலில் தேவையான அளவு துவரம் பருப்பை வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம்.. அதற்கு ஒரு குக்கரில் அரைக்கப் துவரம் பருப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள், அரைத்தக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மிளகு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், ஐந்து பல் வெள்ளை துண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

இந்த முருங்கைக்காய் சாம்பார் செய்ய தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால் சுவை அருமையாக இருக்கும் என்பதால் ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் மூன்று சின்ன தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழம் நன்கு வதங்கியதும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், இரண்டு தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்க வேண்டும்.

அடுத்ததாக நாம் நறுக்கி வைத்திருக்கும் முருங்கக்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். மூன்று முதல் நான்கு நிமிடம் மசாலாக்களுடன் சேர்ந்து முருங்கைக்காயை வதக்க வேண்டும். அதன் பின் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு ஏற்ற உருளைக்கிழங்கு கார மசாலா!

ஐந்து நிமிடம் கழித்து நாம் வேகவைத்து இருக்கும் துவரம் பருப்பு இதனுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளி கரைசல், அரைத்த தேக்கரண்டி பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொடுத்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான முருங்கைக்காய் சாம்பார் தயார்.

இந்த சாம்பாரை இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறுவதற்கு முன்பாக கொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி பரிமாறினால் சுவையும் வாசமும் மேலும் அருமையாக இருக்கும்.