நம் வீட்டு சாம்பார் வாசனையில் ஊரே மணக்க வேண்டுமா? சாம்பார் பொடி செய்வதற்கான ரெசிபி இதோ!

நம் வீட்டில் வைக்கும் சாம்பாரின் வாசனையில் ஊரே மயங்க வேண்டுமா? சுவையான சாம்பார் வைப்பதற்கு காய்கறிகளும், பருப்பும் மட்டும் போதாது. நாம் சமைக்கும் சாம்பாரின் வாசனையையும் சுவையையும் அதிகரிக்க அசத்தலான சாம்பார் பொடியும் தேவை. கடைகளில் வாங்கும் சாம்பார் பொடியை விட வாசனையிலும் சுவையிலும் பத்து மடங்கு சிறந்த வீட்டு சாம்பார் பொடி தயாரிப்பதற்கான எளிமையான ரெசிபி இதோ!

அருமையான சாம்பார் பொடி தயாரிப்பதற்கு ஒரு அகலமான கடாயில் ஒரு கப் முழு மல்லியை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே கடாயில் 2 தேக்கரண்டி சீரகம், இரண்டு தேக்கரண்டி பெருஞ்சீரகம், இரண்டு தேக்கரண்டி மிளகு, இரண்டு தேக்கரண்டி அரிசி, 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.

இதில் சேர்த்துள்ள அரிசி பொரிந்து வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த பொருட்களை தனியாக ஒரு தட்டிற்கு மாற்றி விடவும். அடுத்ததாக அதே கடாயில் காரத்திற்கு ஏற்ப 10 முதல் 15 காய்ந்த வத்தல் சேர்த்து வறுக்க வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வருத்துக்கொள்ள வேண்டும்.

மூட்டு வலி பிரச்சனைகளை நொடியில் சரி செய்யும் முடவன் கிழங்கு ஆட்டுக் கால் சூப்!

வறுத்த இந்த பொருட்களை நன்கு ஆரவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தூள், ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பொடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான சாம்பார் செய்வதற்கான சாம்பார் பொடி தயார்.

நாம் சாம்பார் செய்யும் நேரங்களில் பருப்பு காய்கறிகள் நன்கு வந்ததும் இந்த பொடியை இரண்டு தேக்கரண்டி சேர்த்து செய்தால் போதும் குழம்பு கொதித்து வரும் வேளையில் வரும் வாசனையில் ஊரே மயங்கி விடும்.