ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க நாம் தினமும் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதன் காரணமாக பலவிதமான நோய் காரணிகள் ஏற்படுகிறது. இந்த ஹீமோகுளோபினை அதிகரிக்க மருத்துவமனை சென்று விதவிதமான மருந்துகளை வாங்கிய சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.அதற்கு பதிலாக நம் வீட்டிலேயே சில உணவு முறைகளை மாற்றி ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை இயல்பாகவே அதிகரிக்கச் செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்வதற்கான எளிமையான டிப்ஸ் இதோ..

தினமும் பேரிச்சம் பழத்தை குறைந்தது நான்காவது தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.


முருங்கைக் கீரையை கூட்டாகவோ பொரியல் ஆகவோ வாரத்தில் இருமுறை தொடர்ந்து சாப்பிட வேண்டும். அப்புறம் பொழுது குறைந்தது முருங்கைக்கீரை 200 கிராம் அளவு இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் பீட்ரூட் ஜூஸ் குறைந்தது 100ml குடிக்க வேண்டும். அல்லது பீட்ரூட்டை காயாக சமைத்து சாப்பிட்டால் வாரத்தில் நான்கு முறையாவது பீட்ரூட் எடுத்துக் கொள்ள வேண்டும்.


சுண்டக்காயை குழம்பிலோ அல்லது துயலாகவோ வாரத்தில் இருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்.


முளைகட்டிய சுண்டல் அல்லது பாசிப்பயிறு இவற்றை வாரத்தில் நான்கு முறை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

பால் அல்லது ஜூஸ் குடிக்கும் பொழுது கருப்பட்டி, வெள்ளம், நாட்டுச்சக்கரை இவற்றை பயன்படுத்தலாம். வெள்ளை சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது.

முந்தைய நாள் இரவு ஊற வைத்த கருப்பு திராட்சையை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குறைந்தது நான்காவது சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அதிகரிப்பிற்கு மிகவும் நல்லது.

பீர்க்கங்காயை வாரம் இரு முறை கூட்டாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது..

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சுவையான வெஜ் பிரியாணி! எளிமையான ரெசிபி இதோ!

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் விதம் சாப்பிட்டு வரும் பொழுது உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும்.

தினமும் நம்முடைய மதிய உணவில் பச்சை காய்கறிகள் ஒன்றை உணவாக குறைந்தது 150 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறைந்தது ஒரு முட்டையாவது தினமும் அவித்து சாப்பிட வேண்டும்.