குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கருப்பு கவுனி அரிசி காரப்பொங்கல்!

குழந்தைகளின் அன்றாட உணவில் ஊட்டச்சத்து மிக அவசியமானது. வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து ஊட்டச்சத்துகளும் முறையாக கிடைக்கும் பொழுது அவர்களின் வளர்ச்சி நல்ல விதத்தில் அமையும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விதத்தில் அமைந்தால் அது சிறப்பாக இருக்கும். அந்த வகையில் கருப்பு கவுனி அரிசியை வைத்து குழந்தைகளுக்கு பலவகையான உணவு முறைகளை செய்து கொடுத்து குழந்தைகளின் வளர்ச்சியை மாற்றத்திற்கு உதவியாக இருக்கும். தற்பொழுது கருப்பு கவுனி அரிசியில் வைத்து காரப் பொங்கல் செய்வதற்கான ரெசிபி இதோ.

கருப்பு கவுனி அரிசி சற்று கடினமானதாக இருப்பதால் அதை சமைப்பதற்கு குறைந்தது 10 முதல் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே ஊறவைத்து விட வேண்டும். நாம் இரவு ஊற வைத்தால் அடுத்த நாள் காலையாக கருப்பு கவுனி அரிசி சமைப்பதற்கு தயாராக இருக்கும். அப்படி முந்தைய நாள் இரவு ஊற வைத்து ஒரு கப் கருப்பு கவுனி அரிசி, அரை கப் பாசிப்பருப்பு, ஒரு தேக்கரண்டி சீரகம், சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் ஐந்து முதல் எட்டு விசில்கள் வரைமுறை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

kavuni

குக்கரில் ஒரு கப் கருப்பு கவுனி அரிசிக்கு 4 கப் தண்ணீர் என்ற விதத்தில் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கவுனி அரிசியில் பொங்கல் ஒரு பக்கம் தயாராக மற்றொரு பக்கம் நாம் தாளிப்பு தயார் செய்ய வேண்டும்.

அதற்கு ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி நன்கு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், 10 முதல் 15 முந்திரிப்பருப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இதில் இறுதியாக அடுப்பை அணைத்துவிட்டு அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது தாளிப்பு தயாராகிவிட்டது.

பாரம்பரியமான ஸ்வீட் சாப்பிட ஆசையா? வாங்க தஞ்சாவூர் ஸ்பெஷல் அசோகா அல்வா ட்ரை பண்ணலாம்!

குக்கரில் விசில்கள் வந்தவுடன் அழுத்தம் குறையும் வரை சிறிது நேரம் காத்திருக்கவும். அதன் பின் குக்கரை திறந்து கருப்பு கவுனி பொங்கலுடன் நாம் தாளிப்பை சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்பொழுது சுவையான மற்றும் ஹெல்த்தியான கருப்பு கவுனி அரிசி காரப்பொங்கல் தயார். இந்த பொங்கலை காலை உணவாக சாப்பிட்டு வரும்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து வளர்ச்சி மாற்றத்தில் நன்கு வித்தியாசம் கிடைக்கும்..