பாரம்பரியமான ஸ்வீட் சாப்பிட ஆசையா? வாங்க தஞ்சாவூர் ஸ்பெஷல் அசோகா அல்வா ட்ரை பண்ணலாம்!

பொதுவாக வீடுகளில் விசேஷ நாட்களில் இனிப்பு வகைகள் செய்வது வழக்கம். அதற்கு காரணம் இனிப்பு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்தமான ஒன்று. அந்த இனிப்பு வகை ஹெல்தியானதாகவும் பாரம்பரிய மிக்க சுவையிலும் இருந்தால் அனைவருக்கும் விருப்பம் தான். அந்த வகையில் தற்பொழுது தஞ்சாவூர் ஸ்பெஷல் அசோகா அல்வா நொடியில் செய்வதற்கான ரெசிபி இதோ.

இந்த அல்வா செய்வதற்கு முதலில் ஒரு கப் பாசிப்பருப்பை ஒரு கடாயில் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பொன்னிறமாக வறுத்த இந்த பாசிப்பருப்பை ஒரு குக்கரில் சேர்த்து ஒரு கப் பாசிப்பருப்பிற்கு இரண்டரை கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீரும் சேர்த்து நான்கு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

asogaa

அதே நேரத்தில் மற்றொரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து பத்து முதல் 15 முந்திரி பருப்புகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் மீதம் இருக்கும் அதே நெய்யில் இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்து கட்டி விழாத அளவிற்கு நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது நாம் வேகவைத்து இருக்கும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். ஒரு கப் பாசிப்பருப்பிற்கு ஒன்றரை கப் சர்க்கரை என்ற வீதத்தில் சர்க்கரையை சேர்த்து கொள்ள வேண்டும்.

தினமும் சாம்பார், ரசம் தானா! வாங்க வித்தியாசமாக பருப்பு வடை குழம்பு செய்து அசத்தலாம்!

சக்கரை விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக இரண்டு கப் நாட்டு சக்கரை சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நன்கு கரைந்து பாசிப்பருப்பு மற்றும் கோதுமை மாவுடன் சேர்ந்து நன்கு கலந்து விடும். இப்பொழுது இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து பத்து முதல் 15 நிமிடங்கள் மிதமான தீயில் இந்த அல்வாவை கலந்து கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அல்வாவில் கட்டி விழாமல் அருமையாக வரும்.

15 நிமிடங்கள் கழித்து வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு சேர்த்து இறுதியாக ஒரு முறை கிளறினால் சுவையான தஞ்சாவூர் ஸ்பெஷல் அசோகா அல்வா தயார்.