தோசை பிரியர் உங்க வீட்டிலேயும் இருக்காங்களா? அப்போ அவர்களுக்கான அசத்தல் பள்ளிக் காரம் தோசை ரெசிபி இதோ!

மாவு ஒன்றாக இருந்தாலும் இட்லியை விட தோசைக்கு தான் மவுசு அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலை, மாலை என இருவேளையும் தோசை ஒன்றே போதும் என வாழ்பவர்கள் பலர் உள்ளனர். முறுமுறுவென நெய் மணக்கும் வாசத்தில் எத்தனை தோசை கொடுத்தாலும் பத்தாது என சொல்லும் அளவிற்கு தோசையின் மீது விருப்பம் அதிகம் தான். அப்படிப்பட்ட தோசை விரும்பிகளுக்கு சற்று வித்தியாசமான பள்ளிக் க்காரம் சுவையான தோசை ரெசிப்பி இதோ.

இந்த பள்ளிக் காரம் தோசை செய்வதற்கு முதலில் ஒரு பொடி தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு கப் வேர்க்கடலையை எடுத்து ஒரு கடாயில் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி சீரகம், காரத்திற்கு ஏற்ப ஆறிலிருந்து பத்து காய்ந்த வத்தல், ஐந்து பல் வெள்ளை பூண்டு, பாதி எலுமிச்சை பழ அளவு புளி, ஒரு தேக்கரண்டி தனியா சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

podii

வறுத்த இந்த பொருட்கள் நன்கு சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து முதலில் வறுத்த வேர்க்கடலையும் இதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பொடியாக மாற்றி எடுத்துக் கொள்ளவும். இந்த தோசை செய்வதற்கு பொடி தற்பொழுது தயாராக உள்ளது.

வழக்கமாக உள்ள இட்லி மாவை எடுத்துக்கொண்டு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமாக சூடு ஏறியதும் நன்கு அகலமான ஒரு பெரிய தோசையை ஊற்றி கொள்ளவும். அதன் மீது நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் கொடியை மலைச்சாரல் போல தூவி, சுவைக்காக நெய் சேர்த்துக் கொண்டால் வாசனை அருமையாகவும் சுவை பலமாகவும் இருக்கும்.

தினமும் சாம்பார், ரசம் தானா! வாங்க வித்தியாசமாக பருப்பு வடை குழம்பு செய்து அசத்தலாம்!

முன்னும் பின்னும் இருபுறமும் தோசையை மாற்றி வேக வைத்து எடுத்ததால் பள்ளிக் கார தோசை தயார். இந்த தோசையை சாப்பிடுவதற்கு சட்னி, சாம்பார் என எதுவும் அரைக்க அவசியமில்லை. தோசையின் மீது உள்ள பொடியே நல்ல காரமாக இருப்பதால் அப்படியே சாப்பிட்டு விடலாம்.