வெயில் அதிகரிக்க அதிகரிக்க உடல் உஷ்ணமும் அதிகரிக்கும். அதை குறைக்க நீர் சத்து அதிகமாக உள்ள காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அந்த வகையில் மணத்தக்காளி கீரை உடல் வெப்பத்தை குறைப்பதில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை வைத்து எளிமையான நீர் குழம்பு செய்வதற்கான ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்
வெந்தயம் – கால் தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
வெள்ளைப் பூண்டு- 5
காய்ந்த வத்தல் -3
தக்காளி – ஒன்று
மணத்தக்காளி கீரை – 2 கப்
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகு -5
அரிசி ஊறவைத்த தண்ணீர் – 1 கப்
தேங்காய் பால் – 1 கப்
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அடுத்ததாக வெந்தயம் சேர்த்து தாளித்துக்கொள்ளவும், அடுத்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் வெள்ளை பூண்டு, வத்தல், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் மணத்தக்காளி கீரை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து 5 நிமிடம் வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.
பள்ளி குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை! வல்லாரை பொடி ரெசிபி!
அடுத்ததாக அரிசி ஊறவைத்த தண்ணீர் சேர்த்து கீரை வேகும் வரை கொதிக்க வைக்கவும். கீரை நன்கு வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்த பின் தேங்காய் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். இறுதியாக மணத்தக்காளி கீரை நீர் குழம்பு தயார்.