காய்கறிகள் இல்லாத சமயங்களில் நாம் வீடுகளில் அதிகமாக சமைப்பது காரக்குழம்பு தான். அப்படி காரக்குழம்பு செய்வதற்கும் தக்காளி, வெங்காயம் அத்தியாவசியமாக உள்ளது. ஆனால் சில சமயங்களில் தக்காளி, வெங்காயம் என எதுவும் இல்லாமல் வீட்டில் உள்ள எளிமையான பொருட்களை வைத்து சுவையான ஒரு குழம்பு செய்து அசத்தலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
தனியா – இரண்டு தேக்கரண்டி
சீரகம் – இரண்டு தேக்கரண்டி
மிளகு – இரண்டு தேக்கரண்டி
சாய்ந்த வத்தல் – 6
புளி- சிறிய எலுமிச்சை பழ அளவு
நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
வெந்தயம் – அரை தேக்கரண்டி
வெள்ளைப்பூண்டு – 10 பல்
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
தண்ணீர் மற்றும் உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி தனியா, இரண்டு தேக்கரண்டி மிளகு, இரண்டு தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் நம் அறுத்த பொருட்கள் காய்ந்த வத்தல், ஊறவைத்த புளி, வெள்ளைப்பூண்டு சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
என்ன சமைப்பது என குழப்பமா? ஆந்திரா ஸ்பெஷல் வேர்க்கடலை பொடி ஒருமுறை ட்ரை பண்ணுங்க!
அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதன்பின் நாம் மையாக அரைத்து வைத்திருக்கும் விழுது சேர்த்து நன்கு எண்ணெயில் கலந்து கொள்ளவும். இறுதியாக குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க விடவும்.
இப்பொழுது நமக்கு சுவையான தனியா குழம்பு தயார். இரண்டு நாள் ஆனாலும் இந்த குழம்பு கெட்டுப் போகாது என்பதால் இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.