குலாப் ஜாமுன் பிடிக்காத இனிப்பு பிரியர்கள் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மிருதுவான தித்திப்பு சுவை கொண்ட குலோப் ஜாமுன் அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்று. குலோப்ஜாமூன் மாவு வைத்து சற்று வித்தியாசமாக அல்வா செய்து சாப்பிடலாம் வாங்க.
செய்ய தேவையான பொருட்கள்
குலோப் ஜாமுன் மாவு – ஒரு கப்
சர்க்கரை – அரை கப்
நெய் – 3 தேக்கரண்டி
முந்திரி பருப்பு – ஒரு தேக்கரண்டி
பாதாம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – அரை தேக்கரண்டி
செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து மையாக பொடி செய்து கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் முதலில் குலாப் ஜாமுன் மாவு அடுத்ததாக சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மையாக கரைத்துக் கொள்ளவும்.
தண்ணீராக கரைத்த இந்த கலவையை ஒரு சல்லடை வைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரிப்பருப்பு மற்றும் பாதாம் பருப்புகளை வறுத்து ஓரமாக வைத்து விடவும்.
கல்யாண வீட்டு ஸ்பெஷல் தித்திக்கும் வெங்காய ஊறுகாய்! ரகசிய ரெசிபி இதோ!
அடுத்து மீதமுள்ள அதே நெய்யில் நாம் கரைத்து வடிகட்டி வைத்திருக்கும் குலோப் ஜாமுன் தண்ணீர் சேர்த்து நன்கு கிளற வேண்டும். மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் கிளற வேண்டும். குலோப் ஜாமுன் மாவு இறுக்கமாக வரும் பொழுது சிறிதளவு நெய் சேர்த்துக் கிளறினால் சுவை அருமையாக இருக்கும்.
இறுதியாக நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான குலோப் ஜாமுன் அல்வா தயார்.