எச்சில் ஊறும் சுவையில் மிளகாய் தூள் இல்லாமல் காரசாரமான காடை வறுவல்! 

அசைவ உணவுகளில் காடைக்கு மிக அதிகமாக முக்கியத்துவம் உள்ளது. மற்ற அசைவ உணவுகளை விட காடையில் சற்று அதிகமாக தாமிரம், பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் என்னும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் குறைந்த கலோரிகளை கொண்ட காடையை நம் உணவில் சேர்க்கும் பொழுது நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதை உணர முடியும். அப்படிப்பட்ட பாடையை வைத்து காரசாரமான வருவல் செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

காடை இறைச்சி – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 2
சின்ன வெங்காயம் – 5
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
வெள்ளைப்பூண்டு – பத்து பல்
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
சோம்புத்தூள் – 1 ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் – 1 ஒரு தேக்கரண்டி
மிளகு சீரகத்தூள் – இரண்டு தேக்கரண்டி
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
மல்லி இலை – கைப்பிடி அளவு
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடேற்ற வேண்டும். அதில் தாளிப்பிற்காக பெருஞ்சீரகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சீரகம் நன்கு பொரிந்ததும் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவை நான்கையும் மிக்ஸியில் லேசாக அரைத்து விழுதுகளாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இஞ்சி, பூண்டு பச்சை வாசனை செல்லும் வரை வதக்கினால் போதுமானது. அதன் பின் நான் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் காடை இறைச்சியை அதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இப்பொழுது சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, கறி மசாலா தூள் ,சோம்புத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். அடுத்ததாக மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும்.

வெங்காயம், தக்காளி என ஏதுவும் இல்லாத ஈஸியான மட்டன் வருவல்!  ரெசிபி இதோ…

இப்பொழுது காடை இறைச்சி வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். இறுதியாக வாசனைக்கு மல்லி இலைகள் தூவி இறக்கினால் காரசாரமான காடை வறுவல் தயார். இந்த காடை வறுவல் சாப்பிடுவதற்காக பரிமாறுவதற்கு முன் அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் அரை அளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து பரிமாறினால் சுவை மேலும் கூடுதலாக அருமையாக இருக்கும்.