தினமும் என்ன குழம்பு சமைக்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் குழப்பங்களில் ஒன்று. அந்த நேரங்களில் காய்கறி ஏதும் இல்லாமல் சில பொருட்களை வைத்து எளிமையான முறையில் ஆந்திரா ஸ்டைலில் வேர்கடலை பொடி ஒன்று செய்து விட்டால் மதிய வேலை குழப்பம் முடிந்துவிடும். ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை பொடி தயாரிப்பதற்கான ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை – ஒரு கப்
பொட்டுக்கடலை – அரைக்கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
வெள்ளைப்பூண்டு – 10 பல்
காய்ந்த வத்தல் – 6
தேங்காய் – அரைக்கப்
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
காஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை
ஒரு கடாயில் முதலில் வேர்க்கடலை சேர்த்து நன்று வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக பொட்டுக்கடலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும். அதன் பின் வெள்ளைப் பூண்டு காய்ந்த வத்தல் சேர்த்து வதக்க வேண்டும்.
காரத்திற்கு ஏற்ப வத்தலை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். அதன்பின் தேங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு கைப்பிடி அளவு கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கிளறி கொடுக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி என ஏதுவும் இல்லாத ஈஸியான மட்டன் வருவல்! ரெசிபி இதோ…
நாம் வறுத்து வைத்திருக்கும் இந்த கலவைகளை ஒன்றன்பின் ஒன்றாக மிக்ஸி ஜாரில் சேர்ந்து மையாக பொடியாக்கி கொள்ளலாம். இந்த பொடியில் இறுதியாக ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது நமக்கு சுவையான ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை பொடி தயார். சூடாக இருக்கும் சாதத்தில் இந்த பொடி மற்றும் நெய் கலந்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.