கல்யாண வீட்டு ஸ்பெஷல் தித்திக்கும் வெங்காய ஊறுகாய்!  ரகசிய ரெசிபி இதோ!

கல்யாண வீட்டுப் பந்தி என்றாலே அறுசுவைக்கு குறைவில்லாமல் அனைத்து வகையான காய்கறிகளும் விருந்து போல் அமைந்திருக்கும். அதிலும் ஒரு சில உணவுகளின் சுவை நம் நாக்கை விட்டு நீங்காமல் இருக்கும். இப்படித்தான் இந்த கல்யாண வீட்டு ஸ்பெஷல் வெங்காய ஊறுகாய்! நம் வீடுகளிலும் இந்த ஊறுகாய் ட்ரை பண்ணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

வெந்தயம் – 15 கிராம்
கடுகு – 25 கிராம்
வெங்காயம் – ஒரு கிலோ
நல்லெண்ணெய் – கால் லிட்டர்
புலி- 50 கிராம்
கடுகு – ஒன்றரை தேக்கரண்டி
காஷ்மீர் மிளகாய் தூள் – 100 கிராம்
வெல்லம் – சிறிய துண்டு
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் வெங்காய ஊறுகாய் செய்வதற்கு ஒரு கிலோ வெங்காயத்தை நன்கு தோல் உரித்து பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் கால் லிட்டர் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயத்துடன் புளியும் சேர்ந்து கண்ணாடி பதம் வரும் வரையில் நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

வதக்கி இந்த பொருளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மெய்யாக அரைத்துக் கொள்ளவும். அடுத்ததாக அதே கடாயில் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். சூடு ஆறியதும் வெந்தயம் மற்றும் கடுகை மையாக பொடி செய்து கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதில் பெருங்காயம் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து எண்ணெயில் கிளற வேண்டும். அப்பொழுதுதான் வெங்காய ஊறுகாய் நல்ல சிவப்பாக இருக்கும்.

அதன் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுது மற்றும் கடுகு வெந்தைய பொடி சேர்த்து நன்கு கிளற வேண்டும். மிதமான தீயில் தொடர்ந்து பத்து நிமிடங்கள் பிரட்டும் பொழுது கடாயில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும். இப்பொழுது சிறிதளவு வெல்லம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.. இறுதியாக சுவையான வெங்காய ஊறுகாய் தயார்.