சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பத்து தோசைக்கு மேல் சாப்பிட வேண்டுமா?  அப்போ இந்த சட்னி ட்ரை பண்ணுங்க!

 நம் வீடுகளில்  இட்லி, தோசைக்கு பொதுவாக சட்னி வகைகளும்  சாம்பார் தான்  சைட் டிஷ்ஷாக வைப்பது வழக்கம்.  சற்று புதுமையான முறையில் முட்டை சட்னி   செய்து பாருங்கள்.  பாட்டியின் கைப்பக்குவத்தில் இந்த சட்னி மட்டும் நம்ம வீட்டில் வைத்தால் குழந்தைகள் இன்னும் வேண்டும் என கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.  முட்டை சட்னி ரெசிபி இதோ!

  தேவையான பொருட்கள்

 வெங்காயம் –  இரண்டு

 பச்சை மிளகாய் –  2

 தக்காளி –  2

 வெள்ளை பூண்டு –  10 பல்

கடுகு உளுத்தம் பருப்பு –  ஒரு தேக்கரண்டி

  நல்லெண்ணெய் –  இரண்டு தேக்கரண்டி 

மஞ்சள் தூள் –  அரை தேக்கரண்டி

 குழம்பு மிளகாய் தூள் –  ஒரு தேக்கரண்டி

முட்டை –  2

 தண்ணீர் மற்றும் உப்பு –  தேவையான அளவு

  மல்லி இலை -கைப்பிடி அளவு

 செய்முறை

 ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானது கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.  அதில் நறுக்கிய பச்சை மிளகாய்,  வெங்காயம் தக்காளி பழம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.  வெள்ளைப் பூண்டுகளை நன்கு தோல் உரித்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். 

சப்பாத்திக்கு மிகப் பொருத்தமான ஸ்பெஷல் ஆலு கோபி கிரேவி!

இப்பொழுது மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து எண்ணெயில் வதக்க வேண்டும்.  மசாலாவில் இருந்து வாசனை வந்தவுடன் தேவையான அளவு உப்பு  மற்றும் தண்ணீர் சேர்த்து  பத்து நிமிடங்கள்  மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பின் இரண்டு முட்டைகளை உடைத்து அதனுடன் சேர்த்து சிலரினால் முட்டை சட்னி தயார்.  இறுதியாக மல்லி இலைகள்  தூவி பரி மாறினால் சுவை அருமையாக இருக்கும்.