தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியின் அதே டேஸ்ட்டில் வெஜ் சோயா பிரியாணி! ரெசிபி இதோ!

தலப்பாக்கட்டி ஸ்டைலில் பிரியாணி செய்து சாப்பிட ஆசையா.. அப்படி என்றால் இந்த சோயா வைத்து கண்டிப்பாக இந்த ரெசிபியை ட்ரை பண்ணவும்.

தேவையான பொருட்கள்

சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு- ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்- அனைத்திலும் 2
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
முந்திரி பருப்பு – 6
புதினா இலை மற்றும் மல்லி இலை – கைப்பிடி அளவு
இஞ்சி பூண்டு விழுது – இரண்டு தேக்கரண்டி
தயிர் – அரை கப்
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
மல்லித்தூள் – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு – இரண்டு தேக்கரண்டி
சோயா – ஒரு கப்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை

முதலில் சோயா பிரியாணி செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். அதை போல் சோயாவை கொதிக்கும் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மல்லி புதினா இலை, மஞ்சள் தூள், மல்லித்தூள், முந்திரிப்பருப்பு சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுகள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதிலிருந்து பச்சை வாசனை சென்றவுடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளலாம். மிளகாய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும்.

டப்பு டப்புன்னு பத்தே நிமிடத்தில் தயாராகும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் ஊற வைத்திருக்கும் சோயா சேர்த்து மசாலாவுடன் நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு கப் பாஸ்பதி அரிசிக்கு ஒன்றரை கப் அளவு தண்ணீர் என்ற வீதத்தில் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். இறுதியாக சிறிதளவு மல்லி புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம். குக்கரில் இரண்டு விசில்கள் வைத்து எடுத்தால் சுவையான தலப்பாகட்டி சோயா பிரியாணி தயார்.