வைட்டமின் சத்து நிறைந்த கேரட் வைத்து பொரியல் மட்டும் தான் செய்யனுமா! வாங்க சட்னி செய்யலாம்!

விட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள கேரட் கண்களின் குளிர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு இந்த கேரட்டின் சத்து மிகவும் முக்கியமானது. எப்பவும் கேரட் வைத்து ஒரே மாதிரி பொரியல் தான் செய்யணுமா சற்று வித்தியாசமாக சட்னி செய்யலாம் வாங்க. கேரட் சட்னி செய்வதற்கான ரெசிபி இதோ.

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு- ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு- ஒரு தேக்கரண்டி
வத்தல்- 5
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
வெள்ளைப்பூண்டு- 5 பல்
வெங்காயம் – 2
தக்காளி – 2
கேரட் – ஒரு கப்
கொத்தமல்லி இலை – கைப்பிடி அளவு
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக வெங்காயம், தக்காளி, வத்தல் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதை அடுத்து வெள்ளைப்பூண்டு, புளி , மல்லி இலைகள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியாக நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கேரட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். எண்ணெயில் கேரட் ஐந்து நிமிடங்கள் வதங்க வேண்டும் அப்பொழுதுதான் சட்னி சுவையாக இருக்கும். வதக்கிய இந்த பொருட்களை பத்து நிமிடங்கள் ஓரமாக வைத்திருக்க வேண்டும். அதன் சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைக்கும் பொழுது சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

உடலில் உள்ள பித்தத்தை உடனே குறைக்க… நார்த்தம் பழம் சாதம்!

இப்பொழுது நமக்கு கேரட் சட்னி தயார். தேவைப்பட்டால் எண்ணெய் கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.