ரோட்டோர கையேந்தி பவன் இட்லி கடை ஸ்பெஷல் கார சட்னி! ரெசிபி இதோ!

நம் வீடுகளில் இட்லி மற்றும் தோசைக்கு விதவிதமான சட்னி, சாம்பார் என எது வைத்தாலும் ரோட்டோர இட்லி கடைகளில் கொடுக்கும் காரச் சட்னியின் சுவை அருமைதான். காரச் சட்னிகாகவே நாம் பல இட்லிகளை அடுத்தடுத்து சாப்பிடுவதும் வழக்கமாக வைத்துள்ளோம். அவ்வளவு சுவையான ரோட்டோர கையேந்தி பவன் இட்லி கடை ஸ்பெஷல் கார சட்னி ரெசிபி இதோ.

தேவையான பொருட்கள்

வத்தல் – 10
வெள்ளைப் பூண்டு – 10 பல்
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 2
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
நல்லெண்ணெய்- இரண்டு தேக்கரண்டி

செய்முறை

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். அதில் காய்ந்த வத்தல் சேர்த்து வறுக்க வேண்டும். அதை அடுத்து வெள்ளைப் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்ததாக வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி தோல் பிரிந்து வரும் அளவிற்கு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது கருவேப்பிலை சிறிதளவு புளி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வதக்கிய இந்த பொருட்களை பத்து நிமிடங்கள் ஆரவைக்க வேண்டும்.

இனி நம்ம வீட்டிலயும் ட்ரை பண்ணலாம் இத்தாலியன் ஸ்டைல் சீஸ் பாஸ்தா!

ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய இந்த பொருட்கள் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளலாம். சிவக்க சிவக்க இருக்கும் இந்த காரச் சட்னி இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமான சைடிஷ் ஆக இருக்கும்.