ஈஸியான பிரியாணி செய்யணுமா? அப்போ பேச்சுலர்ஸ் பிரியாணி ட்ரை பண்ணுங்க!

பிரியாணி என சொன்னாலே வாயில் எச்சில் ஊறும் உடனே சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். அந்த அளவிற்கு பிரியாணிக்கும் நம் உணவு முறைக்கும் இடையே ஒரு பந்தம் உள்ளது. இந்த பிரியாணியை பலவிதமாக நாம் செய்திருந்தாலும் மிக எளிமையான முறையில் ட்ரை பண்ணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – ஒரு கப்
முட்டை – நான்கு
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை – அனைத்திலும் 2
பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
வெங்காயம்- 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 2
மல்லி இலை மற்றும் புதினா இலை- கைப்பிடி அளவு
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
மிளகு சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
தயிர் – 2 கப்
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
பிரியாணி மசாலா – இரண்டு தேக்கரண்டி
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

பிரியாணி சமைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும்.
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் தாளிப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். அதன் பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி பூண்டு பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக மிளகாய்த்தூள் மற்றும் பிரியாணி மசாலா சேர்த்துக்கொள்ள வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் இரண்டு கப் தயிர் சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது வாசனைக்காக மல்லி, புதினா இலைகளை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

இனி நம்ம வீட்டிலயும் ட்ரை பண்ணலாம் இத்தாலியன் ஸ்டைல் சீஸ் பாஸ்தா!

அதே நேரத்தில் மற்றொரு கடாயில் நான்கு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளவும். அதில் மிளகு, சீரகத்தூள் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும். முட்டை வறுவல் தயார் செய்தவுடன் இந்த முட்டையை நாம் குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
அதன் பின் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும். இரண்டு விசில்கள் கழித்து இறக்கினால் நமக்கு சுவையான பிரியாணி தயார்.