கொளுத்தும் வெயிலுக்கு நம் முகமும், முடியும் பளபளவென இருக்கணுமா? இந்த ஸ்மூத்தி தினமும் குடிங்க…

பெண்களுக்கு முகம் மற்றும் கூந்தல் பளபளவென இருக்க வேண்டும் என்பது பலரின் ஆசை. ஆனால் வெயிலின் காரணமாக முகத்தில் கரும்புள்ளிகள், நிறம் மாறுபாடு என பல பிரச்சினைகள் ஏற்படும். அதேபோல தலைமுடி அடர்த்தியின்மை, முடி வெடிப்பு, அதிகப்படியாக முடி கொட்டுதல் என அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். முகம் மற்றும் கூந்தலை பளபளப்பாக வைப்பதற்கு நம் வீட்டிலேயே எளிமையான முறையில் ஸ்மூத்தி செய்து தினமும் சாப்பிடலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

பப்பாளி – இரண்டு கப்
பூசணி விதை – ஒரு தேக்கரண்டி
பேரிச்சம் பழம் – 3
இளநீர் – ஒரு டம்ளர்
இளநீரின் வெள்ளை பகுதி – ஒரு கப்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் கழுவி நறுக்கி சுத்தம் செய்து வைத்திருக்கும் பப்பாளி, பேரிச்சம் பழம், இளநீர், இளநீரின் வெள்ளை பகுதி சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பாட்டியின் அதே கைப்பக்குவத்தில்  எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு  சாப்பிடனுமா?   இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க!

பேரிச்சம் பழத்தில் உள்ள இனிப்பே போதுமானது தேவைப்பட்டால் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது பப்பாளி ஸ்மூத்தி தயார். தினமும் இந்த ஸ்மூத்தியை குடித்து வரும் பொழுது வெயிலின் தாக்கத்திலிருந்து நம் உடலை பாதுகாத்து முகம் மற்றும் கூந்தலில் பளபளப்பை பராமரிக்க முடியும்.