வாவ்…! சமையல் அறையில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சூப்பரான டிப்ஸ்கள்!

இன்றைய காலகட்டத்தில் சமையல் என்பதை பலரும் மிக கடினமான வேலையாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே சில எளிய டிப்ஸ்களை கற்றுக் கொண்டால் உங்கள் சமையல் அறையில் செலவிடும் நேரம் வெகுவாக மிச்சமாவதோடு பொருட்களையும் மிச்சப்படுத்தலாம். வாருங்கள் சமையல் அறையில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம்.

சமையலில் ராணியாக இந்த டிப்ஸ்களை மட்டும் தெரிஞ்சுக்கிட்டா போதும்!

1. பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிய பிறகு நம்முடைய கைகளில் நீண்ட நேரம் அதன் மணம் இருக்கும். இவற்றை நறுக்கும் பொழுது நமது கை கண்களில் தெரியாமல் பட்டால் அவ்வளவுதான். எனவே இது போன்ற பொருட்களை நறுக்கும் பொழுது கையில் ஒரு பிளாஸ்டிக் கவரை உறை போல அணிந்து கொள்ளலாம்.

2. காய்கறிகள் எப்பொழுது வாங்கினாலும் அனைத்து காய்கறிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் ஒன்றாக கூடையில் போட்டு வைப்பவரா நீங்கள்? இனி அவ்வாறு செய்யாதீர்கள். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை எப்பொழுதும் தனித்தனியாக வையுங்கள். அப்பொழுதுதான் உருளைக்கிழங்கில் பூஞ்சைகள் வராமல் இருக்கும்.

3. சமையல் அறையில் பயன்படுத்தும் கத்தரிக்கோல் மழுங்கி விட்டது போல் உங்களுக்கு தோன்றினால் கல் உப்பில் வைத்து கத்தரிக்கோலை இருபதில் இருந்து 30 தடவை கத்தரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கத்தரிக்கோல் கூர்மையாகும்.

4. உங்கள் வீட்டில் உள்ள சமையலறையில் எந்த மாவு பொருளை வைத்தாலும் அதனுள் சிறிதளவு கல் உப்பை சேர்த்து கலந்து வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் வண்டுகள், பூச்சிகள் போன்ற உயிரினங்கள் வராமல் நீண்ட நாட்களுக்கு மாவு பொருட்கள் நன்றாக இருக்கும்.

உங்கள் சமையல் வேலையை எளிதாக்கும் சூப்பரான கிச்சன் டிப்ஸ்கள்…!

5. சில வகையான இனிப்புகளுக்கு நாம் வெல்லத்தை பயன்படுத்தி செய்வது உண்டு. அவ்வாறு வெல்லம் சேர்க்கும் பொழுது அதனை இடித்து சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படும். அவ்வாறு வெல்லத்தை இடிப்பது என்பது பலருக்கும் கடினமான வேலையாக தோன்றலாம். எனவே வெல்லத்தை கேரட் துருவும் துருவியில் நீங்கள் துருவிக் கொள்ளலாம். இவ்வாறு துருவுவதால் வெல்லம் தூள் தூளாக உதிரியாக வந்துவிடும். வெல்லத்தை இடிக்க வேண்டிய கஷ்டம் இருக்காது.