உடம்பு மெல்லிய வேண்டுமா? கொங்கு நாட்டு ஸ்பெஷல் கொள்ளு கடையல்!

உடல் எடை அதிகரித்தல் என்பது இந்த காலத்தில் இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை உள்ள அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாக மாறி உள்ளது. அதிகப்படியான உடல் எடையின் காரணமாக உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வியாதிகளுக்கு வழி வகுக்கிறது. நாம் உடல் எடையை குறைக்க வீட்டில் உள்ள கொள்ளை வைத்து ஒரு கடையல் செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

கொள்ளு – ஒரு கப்
வெள்ளைப் பூண்டு – ஐந்து பல்
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 3
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
மல்லி – ஒன்றரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 6
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

கொள்ளு கடையில் செய்ய நாம் கொள்ளை நன்கு கழுவி சுத்தம் செய்து குறைந்தது 8 முதல் 10 மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும். ஒரு குக்கரில் ஊற வைத்த கொள்ளு ஒரு கப், பச்சை மிளகாய் இரண்டு, மூன்று தக்காளி சேர்த்து ஐந்து விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

காஞ்சிபுரம் இட்லிக்கு மட்டும் இல்ல… ரவா தோசை, காரச் சட்னிக்கும் ஸ்பெஷல் தான்!

மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், காய்ந்த வத்தல், வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் இந்த கலவையை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் நாம் வேகவைத்திருக்கும் கொள்ளு, தக்காளி, பச்சை மிளகாய் கலவையை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளலாம். சுவைக்கு ஏற்ப கல் உப்பு சேர்த்து அழைக்க வேண்டும்.

இதை நாம் வீட்டில் கீரை மத்து கொண்டு கடைந்தெடுக்கலாம். இப்பொழுது நமக்கு கொள்ளு கடையல் தயார். தேவைப்பட்டால் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.