சுகர் பிரச்சனைக்கு தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட கஷ்டமா இருக்கா… அப்போ ரசம் வச்சி சாப்பிடுங்க!

பொதுவாக 40 வயதை தொடுபவர்களுக்கு இந்த காலத்தில் அதிகம் வரும் பிரச்சனைகளில் ஒன்று சுகர். இன்சுலின் குறைபாட்டால் ஏற்படும் இந்த பிரச்சனையை நாம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து முடிந்தவரை சரி செய்ய முடியும். அதில் ஒன்றுதான் வெற்றிலை. தினமும் ஒரு வெற்றிலை சாப்பிடும் பொழுது சுகர் சரியான அளவில் மேம்படுத்த உதவியாக இருக்கும். ஆனால் வெற்றிலை சாப்பிட்டு பழக்கம் இல்லாதவர்களுக்கு இது சற்று கடினமான ஒன்று. அதற்கு பதிலாக இந்த வெற்றிலையை வைத்து ஒரு சுவையான ரசம் செய்து சாப்பிடலாம் வாங்க. இது சுகர் தொந்தரவு இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் மிகச் சிறப்பாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

வெற்றிலை- ஆறு முதல் எட்டு
தக்காளி – 2
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
காய்ந்த வத்தல் – 2
வெள்ளை பூண்டு – 5 பல்
மிளகுப் பொடி – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள்- ஒரு தேக்கரண்டி
மல்லி இலை – கைப்பிடி அளவு
தண்ணீர் – தேவையான அளவு
நல்லெண்ணெய்- ஒரு தேக்கரண்டி
கடுகு மற்றும் வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை- கைப்பிடி அளவு

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் வெற்றிலை மற்றும் தக்காளியை சேர்த்து அரைத்து விழுதுகளாக எடுத்துக் கொள்ளவும். அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதுகளை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் கைப்பிடி அளவு மல்லி இலையை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பிறகு மஞ்சள் தூள், மிளகு தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.

அடுத்ததாக மிளகு, சீரகம், காய்ந்த வத்தல், வெள்ளை பூண்டு இவற்றை ஒன்றாக சேர்த்து பரபரவென அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த பொருட்களை மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிப்பிற்காக கடுகு,சிறிது வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும். கடுகு மற்றும் வெந்தயம் நன்கு பொறிந்ததும் அதில் கருவேப்பிலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

அதன் பின் மிளகு, சீரகம், வத்தல், பூண்டு அரைத்த கலவையை சேர்த்துக் கொள்ள வேண்டும். வாசனை வரும் வரை இதை பார்த்து கொள்ள வேண்டும். தாளித்து வைத்திருக்கும் இந்த கலவையை வெற்றிலை அரைத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது தேவையான அளவு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

 பத்தே நிமிடத்தில் சட்டென செய்து முடிக்கும் ஈவினிங் ஸ்நாக்ஸ்!  முட்டை பணியார ரெசிபி இதோ!

இறுதியாக சுவை பார்த்துவிட்டு தேவைப்பட்டால் கூடுதலாக உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வெற்றிலையை வைத்து இப்பொழுது நமக்கு சுவையான ரசம் தயார். இந்த ரசம் சுகர் தொந்தரவு மட்டும் இன்றி சளி பிரச்சனை, அஜீரணக் கோளாறு, வாய்வுத் தொல்லை என அனைத்திற்கும் ஒரு சிறப்பான மருந்தாக அமைந்திருக்கும்.