ஆரோக்கியம் நிறைந்த கீரை வைத்து இப்படி கீரை கூட்டு செய்து பாருங்கள்…!

நம் உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று கீரை. அது எந்த கீரையாக இருந்தாலும் பரவாயில்லை தினமும் நம் உணவில் தவறாமல் சேர்த்து வந்தால் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். மேலும் உடல் ஆரோக்கியம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து நோயற்ற வாழ்வையும் வாழ முடியும். நோய் இல்லாத வாழ்வுக்கு வழிவகுக்கும் கீரையை வைத்து எப்படி கீரைக்கூட்டு செய்வது என்பதை பார்க்கலாம்.

சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை வைத்து சுவையான கீரை பொரியல் செய்வது எப்படி?

இந்த கீரை கூட்டுக்கு பசலைக் கீரை அல்லது அரைக்கீரை என எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கீரை கூட்டு செய்ய முதலில் ஒரு கப் அளவு துவரம் பருப்பை நன்கு கழுவி ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி வேக விடவும். குக்கர் நான்கு விசில் வரும் வரை வைக்கவும். பிறகு ஒரு பேனில் ஒரு மேஜை கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். பிறகு இரண்டாக நறுக்கிய மூன்று பல் பூண்டு, மூன்று பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

தோல் உரித்த பத்து சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் ஒரு கப் அளவிற்கு பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களையும் சேர்த்து வதக்கவும். பிறகு 250 கிராம் அளவு வரும் படி கீரையை சேர்த்துக் கொள்ளவும். கீரை வதங்க வதங்க சுருக்கிவிடும் அதன் பிறகு உப்பு சேர்க்கலாம். கீரை நன்கு வதங்கி சுருங்கியதும் இதில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு சாம்பார் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு வேகவைத்து வைத்திருக்கும் துவரம் பருப்பை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

சத்தான முருங்கைக்கீரை வைத்து இப்படி குழம்பு செய்து பாருங்கள்… ஆரோக்கியமான முருங்கைக் கீரை குழம்பு!

இதற்கான தாளிப்பு இப்பொழுது நாம் செய்யலாம் அதற்கு ஒரு சிறிய கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் சிறிதளவு கடுகு, உளுத்தம் பருப்பு, கால் ஸ்பூன் சீரகம், இரண்டு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தாளித்துக் கொள்ளவும். இவற்றை தாளித்த பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் கீரையுடன் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் அட்டகாசமான அதே சமயம் ஆரோக்கியம் நிறைந்த கீரை கூட்டு தயார். இது தோசை, இட்லி, சாதம், சப்பாத்தி என அனைத்து உணவிற்கும் அட்டகாசமாக இருக்கும்.