இறால் அனைவருக்கும் பிடித்த ஒரு கடல் உணவாகும். இந்த இறால் எளிமையாக சமைத்தாலும் மிக சுவையாக இருக்கும். இறாலை வைத்து பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். இறாலை சுத்தம் செய்வது பலருக்கு கடினமான விஷயமாக தோன்றினாலும் இறாலின் சுவைக்கு முன்பு அது பெரிய வேலையாக தெரிவதில்லை. மேலும் இந்த ரெசிபியில் இறாலை சுத்தம் செய்து விட்டால் போதும் அதற்குப் பிறகு இதன் செய்முறை மிகவும் எளிது. வழக்கமான இறால் தொக்கு, இறால் கிரேவி என்று இல்லாமல் இது போல் ஒரு முறை வித்தியாசமாக இறால் தவா ஃப்ரை செய்து பாருங்கள்.
மணமணக்கும் நாட்டுக்கோழி ரசம்… எல்லா உடல் நல பிரச்சனையையும் விரட்டிடும் பாருங்க!
இந்த இறால் தவா ஃபிரையை செய்ய அரை கிலோ இறால் வாங்கி நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். சுத்தம் செய்த இறாலுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒன்றரை ஸ்பூன் தனியா தூள், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். மசாலாக்கள் சேர்த்த இறாலை 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும்.
இப்பொழுது அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு கருவேப்பிலை சேர்த்து மூன்று பச்சை மிளகாய்களை கீறி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது மசாலா தடவி ஊற வைத்த இறாலை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மசாலாக்களுடன் சேர்ந்து இறால் நன்கு வெந்ததும் இதனை அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
அவ்வளவுதான் சுவையான இறால் தவா ஃப்ரை தயார்!